உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மக்களுக்கு ஓட்டு வந்ததிலே, மகிழ்ச்சி கிடையாது!

‘மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிக்கிறவனிடம் ‘ஓட்டு’ கொடுத்தால். நாடு உருப்படுமா, என்ன? குட்டிச்சுவராத்தான் போகும்’

என்ற எண்ணம் கொண்டவர், அப்படிப்பட்டவரின் ‘பிரசார பலத்தை’க்கொண்டு, காங்கிரஸ் எப்படித் தேர்தல் வெற்றி தேடிக்கொள்ள முடியும்?

என்னைத் திட்டிப் பேசுகிறாரே, அதுதான் மிச்சம்! வேறு உருப்படியான பலன், பெரியார் மூலமாகக் கிடைக்காது; காங்கிரஸ் மூலவர்கள் அதனையும் நன்கு அறிந்துகொண்டிருப்பதால்தான், வேறுவேறு ‘கருவிகளை’க் கூராக்கியபடி இருக்கிறார்கள்.

ஆனால், பெரியாரைக்கொண்டு என்னை ஏசிப்பேசத்தான் வைக்கமுடிகிறதே தவிரக், காங்கிரஸ் ஆட்சியினால் விளைந்துள்ள கேடுகளை, கேடுகள் அல்ல என்று பேச வைக்க முடிகிறதா? முடியவில்லை!

பக்ராநங்கலைப் பாராட்டுங்கள்,
பாரத ஒற்றுமை பற்றிப் பேசுங்கள்,
நேருவின் பெருமையைக் காட்டுங்கள்.

என்றெல்லாம் பெரியாரிடம் சொன்னால், ஒத்துக்கொள்கிறாரா? அதுவும் இல்லை! அண்ணாத்துரையைத் திட்டவா? காமராஜரைப் புகழவா? இந்த இரண்டும் தெரியும்; பிடிக்கும்; பழக்கம்? சிந்திரி, சித்தரன்ஜன், பிம்ப்ரி, பிலாய், இவைபற்றி எல்லாம் பேசச்சொன்னால், மனம் இடம் கொடுக்குமா பெரியாருக்கு!! ஒருக்காலும் இல்லை!!

தம்பி, இன்று, பண்டித நேரு ஐரோப்பிய பொதுச்சந்தையிலே மாக்மில்லன் பிரிட்டனைச் சேர்த்தது சரியா தவறா என்பதிலே இருந்து, நீர்வளிக் குண்டுகளை ரஷியாவும் அமெரிக்காவும் மாறிமாறி வெடித்தபடி இருப்பதைக் கண்டிப்பது வரையில், காஸ்ட்டிரோவின் ஆட்சி முறையிலிருந்து காங்கோ பிரச்னை வரையில் பேசுகிறார். அவர் நிலைமை