உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வேதநாயகம், பொய்யுரைப்போரை, நகைச்சுவையுடன் கூடிய பாடலால், சாடினார். குருடன் குறிபார்த்து அம்பு எய்கிறான்! ஊமை, திட்டுகிறான்! செவிடன் அதைக் கேட்டுச் சிரிக்கிறான்! கரம் இல்லாதவன் ஆளை இழுக்கிறான்! கால் இல்லாதவன் எட்டி உதைக்கிறான்! தலையில்லாதவன். ஆளைக் கடிக்கிறான்!!

நம்புவார்களோ! நம்பமாட்டார்கள்;

கூறுவரோ? இதனையே அல்ல என்றாலும், இது போன்ற பொய்யுரைகளைக் கூறுவர்—எங்கு? எவர்? வழக்குமன்றத்தில்! காசாசையால்!

நம்மைப்பற்றிப் பேசப்படுவன, இவைபோன்றன; நம்ப முடியாதன! எனவே, நாம், பதிலுரை தரத் தேவையில்லை! நாடு, நல்ல தீர்ப்பளிக்கும்; நாம் நமது நினைப்பைத் திருப்பரங்குன்றம் பக்கம் திருப்புவோம்; மாநாடு நமக்கு மாண்பளிக்கும்.


25-6-61

அண்ணன்,
அண்ணாதுரை