78
காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப், பலரும் பரிவு காட்டிப் பக்கம் நின்று துணை புரியவேண்டும் என்ற முறையைத் துணைகொண்டு, இலட்சியத்தைக் குறைத்தும், மறைத்தும், தேய்த்தும் உருக்குலையச் செய்துவிட்ட நிலைக்குத் தம்மைத் தாமே துரத்திக்கொண்ட துரைத்தனத் தலைவரின் பேச்சு, அல்ல — அதிலே தயக்கம், தடுமாற்றம், முரண்பாடு, முணு முணுப்பு, மிரட்டல் என்பவைகள் கலந்துவிட்டன!
தொடுத்த கணை ‘விர்’ரெனப் பாய்கிறதல்லவா! பாயும் அம்பு! நான் குறிப்பிடும் நேரு!!
குறி தவறிக் கீழே வீழ்ந்து கிடக்கும் அம்பு போன்றுள்ள நிலையினராகிவிட்ட நேரு அல்ல!!
ஊர்வலத்தினர், உலக நாடுகளிடம் கடன் வாங்கவல்ல, உள்நாட்டிலே தேர்தல் வெற்றி பெற்றுத் தரத்தக்க, எதிர்க் கட்சிகளை அழித்தொழித்திடும் ஆற்றலைக் காட்டி நிற்கும், நேருவின் புகழ் பாடிக்கொண்டு சென்றனர். நானோ ‘பழுதுபடாத இரத்தினமாக’ இருந்த நாட்களில் அவர் பேசியவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர்களோ அடுத்து வரஇருக்கும் தேர்தலை எண்ணிக்கொண்டு, நேருவை வாழ்த்திக் கொண்டிருந்தனர்.
வழக்குமன்றத்திலே முழக்கம், வாலிபர் மாநாட்டிலே பேச்சு, காங்கிரஸ் மாநாடுகளிலே பேருரை. பத்திரிகை நிருபர்களிடம் விளக்கம். இவ்வண்ணம் வடிவங்கள் பல உள; ஆனால் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது, வீரஉணர்ச்சி, செயலாற்ற வேண்டுமென்ற துடிப்பு, இலட்சியம் வெற்றிபெற்றே தீரும் என்ற திடமான நம்பிக்கை, மக்கள் திரண்டெழுந்துவிட்டனர் என்பதைக் கண்டதால் ஏற்பட்ட களிப்பு!
வாதாடுவதற்காக, நான் வழக்குமன்றத்திலே நிற்கவில்லை! என் நாடு விடுதலை பெறவேண்டும் என்பதற்கு நான் வாதாடவா வேண்டும்!! பொருள் இல்லை அதற்கு.
ஏதேதோ, செக்ஷன்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் செய்த குற்றங்கள் என்பதாக; நான் ஒரே ஒரு குற்றம்தான் செய்திருக்கிறேன்—தொடர்ந்து செய்து கொண்டு வருவதாகவும் இருக்கிறேன்; என் நாட்டை அந்நியன் பிடியிலிருந்து மீட்பதற்காகப் போராடுவது. அது குற்றம் என்றால், நான் குற்றவாளி! சந்தேகமின்றி!!