94
நம்முடைய கழகத்தில் ஒரு சிறு சம்பவம் ஏற்பட்டாலும், பெரிதாக்கிக் காட்டி, ஊர் கூட்டி, குழப்பி, நமது கழகத்தைக் குலைக்க முயற்சி எடுப்பார்கள்; எடுக்கிறார்கள்.
இப்போது, தம்பி! விளக்கமாகிறதல்லவா, ஏன். நம்முடைய விடுதலைக் கிளர்ச்சியை, அந்த விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட கழகத்தை, காங்கிரஸ் தலைவர்கள் துச்சமாக மதிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்பதற்கான காரணம்.
சொல்லிவிட்டேன். நீ சோகமடைய அல்ல. ஒவ்வொருவரும் தத்தமது பங்காகக், கழகத்தின் கண்ணியம் நம் ஒவ்வொருவரின் உரிமையைவிடப் பெரிது என்ற போக்கில், நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக.
ஆனால், இதனால் நமது கழகம் ஒழிந்துபோகும் என்று நம்புவது மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டத்துப் பல்வேறு இராஜ்ய முதல் மந்திரிகளெல்லாம் கூடிய மாநாட்டில், கனம் காமராஜர், இதனை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்— அறிவாய்.
நாட்டைப் பிரிவினை செய்யவேண்டும் என்ற கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தி. மு. கழகத்தை. ஒழித்தாக வேண்டும்! அதற்காகக், கழகத்தையே தடுத்துவிடலாமா? அல்லது தனித்தனியாகக் கழகத் தோழர்களைப் பிடித்திழுத்துக் கூண்டிலேற்றிக் கடுமையாகத் தண்டித்து அழிக்கலாமா? என்ன செய்து இந்தப் பிரிவினைச் சக்தியை ஒடுக்குவது என்பதுபற்றிக் கூடிக் கலந்துரையாடினர், முதலமைச்சர்கள்.
அப்போது காமராஜர்,தி. மு. கழகத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை; அது தன்னாலே அழிந்துவிடும்; இப்போதே, அதிலே ஏகப்பட்ட பிளவு. சண்டை, சச்சரவு! எலக்ஷனுக்குப் பிறகு, இருக்கவே இருக்காது. அதைப்பற்றிக் கவனிக்காமலிருந்துவிட்டால், அது, தன்னாலே செத்துவிடும் என்று பேசியிருக்கிறார்.
புரிகிறதா, தம்பி! காமராஜர், எதை நம்பிக்கொண்டிருக்கிறார், என்பது. நம்மிடையே பிளவு! நம்மிடையே சண்டை சச்சரவு!?... இதனைத்தான் மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறார். இதை அறியாமல், குத்திக் கிளறி விடுவதுதான் யாராலுமே முடியாத, அபாரமான ஆற்றல் என்ற எண்ணத்தில் நடந்துகொள்பவர் எவராயினும், அவர்கள் தெரிந்தோ,