உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

தெரியாமலோ, காமராஜரின் கரத்தை, கருத்தை வலிவுள்ள தாக்குகிறார்கள் என்றுதான் பொருள்படும்.

தம்பி! காட்டிலே உள்ள புலி, தன் இரையை வேட்டையாடித்தான் பிடித்துத் தின்னும். பலப்பல மைல்கள் வேட்டைக்காக ஓடுமாம், களைப்பு மேலிடுகிற முறையில்! அந்தவிதத்தில், அடித்துத் தின்றால் தான், அதற்குத் திருப்தி.

பெருஞ் சிறகடித்துப்பறக்கும் கழுகு, இருக்கிறதே அது வேட்டை ஆடாது—துரத்தித் தாக்காது— துளைத்துக் கொல்லாது—ஆடோ மாடோ, கொல்லப் பட்டோ செத்தோ, பிணமாகி, அழுகி, நாற்றம் அடிக்கும் நிலையிலே கிடக்கும்போதுதான், கீழே இறங்கிவந்து, குத்திக் கிளறித் தின்று, பசி தீர்த்துக் கொள்ளும்.

சில முதலமைச்சர்கள் நம்மை வேட்டையாடிக் கொல்லவேண்டும் என்று திட்டம் தருகிறார்கள்.

காமராஜரோ. கழுகு முறையைப் பின்பற்றலாம் என்கிறார்.

வேட்டையாட நினைக்கும் திட்டத்தினர், கழகத்தைத் தடைபோட்டு, ஒழித்துக் கட்டலாம் என்று நினைப்பதும் பேதமை, கழுகாகலாம் என்று கூறும் காமராஜரின் யோசனையும் பலிக்கப் போவதில்லை.

விடுதலை இயக்கம், தடையால், படையால், அழிவதில்லை!

விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்து விட்டோம், என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால், அது புதைகுழியைப் பிளந்துகொண்டு, மீண்டும் மீண்டும் எழும்!

சில ஆறுகள் ஓடிக்கொண்டே வருமாம்; இடையிலே காணாமலே போய்விடுமாம்! பிறகோ நெடுந்தொலைவில் வேறோர் இடத்திலே அதே ஆறு கிளம்பி ஓடிவருமாம்! தம்பி! காணாமற் போய்விட்டது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது, என்ன நடக்கிறது என்றால், ஆறு ஒரு பிலத்தின் வழியாகப் பூமிக்கடியில் சென்றுவிடுகிறது! மறைந்துவிடுகிறது! பிறகு? நெடுந்தூரம் அடிவாரத்திலே ஓடி, மீண்டும் ‘குபுகுபு’-