பக்கம்:தம்பியர் இருவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 95。

மன்இ ழைத்ததும் மைந்தன் இழைத்ததும் முன் இ ழைத்த விதியின் முயற்சியால் பின்இ ழைத்ததும் எண்ணில் அப்பெற்றியால் என்இ ழைத்தனை? என்மகனே!' என்றாள்.

(கம்பன்-10178)

மேலும் கூறுவாளாய், மகனே நீ தீப்புகுந்தால் உன்னுடன் அனல் புகும் தாயராகிய எம்முடன் இது நிற்பதன்றே! உலகு அனைத்தும் தீப்புக நீ காரணமாதல் முறையா? (10179) உன் செயல்களை இதுவரை கண்டு வந்திருக்கிற எங்கட்கு அவை அனைத்தும் அறத்தின் சாரமாகவே உள்ளன. உன் பெருமையை நீயே அறியாய்! கோடிக் கணக்கான இராம்ர்கள் கூடினாலும், உன்னுடைய அருளுக்கு எதிராவரோ? ஐய, புண்ணியத்தின் வடிவான நின்னுயிர் போனால், மூவுலகங்களும் அவற்றில் வாழும் உயிர்களும் அழிந்துவிடுமே!’ என்ற முறையில் பேசுகிறாள்.

'தரும நீதியின் தற்பயன் ஆவது உன்

கரும மேயன்றிக் கண்டிலம் கண்களால்; அருமை ஒன்றும் அறிந்திலை; ஐய!கின் பெருமை ஊழி திரியினும் பேருமோ?

'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்

அண்ணல் கின்அரு ளுக்குஅரு காவரோ? புண்ணி யம் எனும் கின்உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?”

(கம்பன்-101 80, 'si,

இராமனைத் தேடி அன்பின் மிகுதியால் காட்டுக்கு வந்த பரதனைக் கண்ட குகன், ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின்? என்றான். அன்பையும் கடந்து கடமை என்பதற்காகவும் கூறிய சொற்களைக் காப்பான் வேண்டி யும் தீயில் விழப்போகும் பரதனை எண்ணில்லாத இராமர் கள் ஒன்று கூடினாலும் உனக்கு இண்ையாகார்!" என்கிறாள் வளர்த்த தாய்!