பக்கம்:தம்பியர் இருவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

og 6 தம்பியர் இருவர்

தந்தை சொல்லைக் காக்கக் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்த இராமனைக் காட்டிலும் தான் சொல்லிய சொல்லையே காக்கத் தீயில் வீழ்ந்து உயிரை விடத் துணிந்த பரதன் பன்மடங்கு உயர்ந்தவனாதல் கண் கூடு, தந்தை கட்டளையை மேற்கொண்டு நடந்த இராமன் கடமையைச் செய்தான். ஒருவரும் ஏவா திருக்கவும் தன் சொல்லைக் காப்பவன் அருள் உடைய யவனாகிறான். தந்தையின் கட்டளை தனது கடமை என்பவற்றை மேற்கொண்ட இராமனது அன்பைக் காட்டி லும், தன் சொல்லைக் காப்பான் உறுதி பூண்ட பரதனது அருள் உயர்ந்ததாதலை நன்கு அறியலாம். இதனைத் தான் கற்றறிவுடையவளாய கோசலை, அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ?' என்று புகழ்கிறாள்.

கோசலை கூறும் இந்தப் புகழ் உரைகளும், இராமன் இன்றில்லாவிடினும் நாளை வருவான்,' என்றுரைத்த மொழிகளும் பரத வள்ளலின் செவியில் நுழையவே இல்லை. இதனையடுத்துப் பல நீதிகளையும் அப்பெரு மாட்டி கூறுகிறாள், எனினும், பரதன் தன் குறிக்கோளை விடவில்லை. இரண்டே வாதத்தில் தாயை மடக்கி விடு கிறான் அம்மகன். வாய்மை தவறாத தசரதன் மகனும், சொற்படி நடந்த இராமன் தம்பியும் அல்லனோ யான்? அவ்விருவரும் நன்று செய்தனர் என்று கூறினால், என்னை மட்டும் இழுக்குக் கூறுவது யாங்ங்னம்?’ என்கிறான். இதை விட ஒருபடி மேற்சென்று இராமனிடம் குற்றங்காண் கிறான் பரதன். தாயே, தாய் சொல் கேட்டும், தந்தை சொல் கேட்டும் வனம் சென்று, அன்புடையார்களிடத்து அன்பை முழுவதும் மறத்தல் என்பது இராமனுக்கே கடன். நான் அவ்வாறு செய்ய உடன்படேன், என்கிறான். 'தாய்சொல் கேட்டலும் தந்தைசொல் கேட்டலும்

பாசத்து அன்பினைப் பற்றுஅற நீக்கலும் . ஈசற் கேகடன், யான்அஃது இழைக்கிலேன்.”

(கம்பன்-10187)