பக்கம்:தம்பியர் இருவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 97.

என்பது அவன் கூற்று. தான் வனஞ்சென்று எவ்வளவு வேண்டியும் வாக்குறுதியை மீறக் கூடாது என்று எடுத்துக் காட்டி வரமறுத்த இராமன், இப்பொழுது வருவேன்’ என்ற வாக்கை மீறினான் என்ற வருத்தம் பரதனுக்கு.

இதுகாறுங் கூறியவற்றால் கோசலை கண்ட பரதன் எத்தகையவன் என்பதை ஒருவாறு கண்டோம். - இராமன் காடு செல்லுமுன்னர்ப் பரதன் அயோத்தியில் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை நாம் அறிதல் இயலாது. ஆனால், இராமனிடம் சென்று அவன் பாதுகைகளைப் பெற்று வந்த பின்னர் அவன் வாழ்வு எவ்வாறு நடை பெற்றதென்பதை அறியப் பரத்துவாச முனிவன் கூற்றாய் அமைந்துள்ள இரண்டு பாடல்கள் போதுமானவை. வேர்க்கின்ற உடலினை உடையனாய், விழியிற் பொழியும் மழையை உடையனாய், ஊழ்வினையை வெறுத்த சிந்தையை உடையனாய், தென்திசை தவிரப் பிறிது திசை நோக்காதவனாய், துன்பமே ஒரு வடிவாகக் கொண்ட வனாய், ஐந்து பொறிகளையும் அவற்றின் வழிச் செல்லாமல் தடுத்தவனாய், காய் கனிகளையே நுகர்ந்து புற்படுக்கையில் உறங்குபவனாய், நந்திக் கிராமத்திலேயே அல்லும் பகலும் இருப்பவனாய், ஓயாது இராம நாமத் தையே கூறிக் கொண்டிருப்பவனாய் ஒருவன் உளன் எனில், அவனே பரதன்,' என்னுங்கருத்துப்பட,

"வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்

செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துஉழந்து அழிவான் அயிர்த்து நோக்கினும் தென்திசை அன்றிவேறு அறியான் பயிர்த்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான் 'இந்தி யங்களைந்து இருங்கனி காய்நுகர்ந்து இவுளிப்

பந்தி வந்தபுல் பாயலான் பழம்பதி புகாது - நந்தி யம்பதி இருந்தனன் பரதன்கின் நாமம் அந்தி யும்பகல் அதனினும் மறப்பிலன் ஆகி.’

(கம்பன்-10143, 44) என அமைந்துள்ளன அச்செய்யுட்கள்.

த.-7