பக்கம்:தம்பியர் இருவர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.8 தம்பியர் இருவர்

நினைவுறுத்துகிறான் இராமன்; அதுபோல நீயும் என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக, என்கிறான்.

  • அன்னது கினைந்து எேன் ஆணையை மறுக்க லாமோ? சொன்னது செய்தி ஐய! துயருழந்து அயரல், என்றான்” * (கம்பன்-2491)

இராமன் கூறிய இந்தச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட பரதன் அஞ்சத்தக்க ஒரு வஞ்சினம் கூறுகிறான்: “நீ கூறும் பதினான்கு ஆண்டுகள் கழித்து நீ வரவில்லையானால், யான் நெருப்பில் வீழ்ந்து இறந்துபடுவேன்! உன்மேல் ஆணை! என்கிறான். -

'ஆம் எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐய! நீ

நாமநீர் நெடுநகர் கண்ணி நானிலம் கோழுறை புரிகிலை என்னில் கூர் எரி சாம்.இது சரதம்:கின் ஆணை சாற்றினேன்!”

(கம்பன்-25:07)

இந்த வஞ்சினத்தைக் கேட்டு அஞ்சிய இராமன், வேறு வழி இன்றி ஒப்புக்கொள்கிறான்; எனினும், சீதையை மீட்டு வரும் வழியில் பரத்துவாசன் இடத்தில் தங்க நேரிடுகையில் பதினான்கு ஆண்டுகள் அன்றுடன் முடிதலின், அனுமனை அனுப்புகிறான்; அனுப்பும் பொழுது சென்று தீதின்மை செப்பி அத்தீ அவித்து வா, என்று கூறி அனுப்புதலால், பரதன் வாக்குப்படி செய்துவிடுவான் என்பதில் இராமன் கொண்டிருந்த நம்பிக்கை புலனாகிறது. - r

இராமனை எவ்வாற்றானும் மீட்டுச் செல்லல் இயலாது எனக் கண்ட பரதன், இராமன் ஆணைப்படியே நடக்க முடிவு செய்துவிட்டான். நான் வரும் வரை என் பிரதிநிதி போல இருந்து ஆள்க, என்றானல்லனோ இராமன்? அதனால், பரதன் அவனுடைய பிரதிநிதியாகவே இருக்க முடிவு செய்துவிட்டான். மன்னனுடைய குடை, வாள், கிரீடம் என்பவற்றுள் ஒன்றை அவனுடைய அடை