பக்கம்:தம்பியர் இருவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 07

என்பதையறிந்த இராமன் அன்புக் கட்டளை வழியை மேற்கொண்டானல்லானோ?

'எந்தை ஏவஆண்டு ஏழொடு ஏழெனா வந்த காலம்கான் வளத்துள் வைக,நீ தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் அந்த காள்ளலாம் ஆள் என் ஆணையால்.’

- (கம்பன்-2490)

பரதன் வாதத்தை நம்பிக்கொண்டே இராமன் பேசுகிறான் இப்பொழுது. இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. இங்கு. இராமன் தந்தை சொல்லை மீறாமல் இருக்க வேண்டுமா யின், பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருத்தல் வேண்டும். பரதன் வேண்டித் தருவதை மறுக்காமல் இருக்க வேண்டு மாயின், உடன் நாடு திரும்ப வேண்டும். இவை இரண்டும் தம்முள் மாறுபட்டவை. எனவே, அறிவுக் கடலாகிய இராமன் ஒரு புது வழி காண்கிறான்; பாடவில் முதலிரண்டு அடிகளால், 'யான் தந்தை சொல்லைக் காப்பாற்று கிறேன்' என்று கூறிவிட்டான்; அடுத்த இரண்டு அடிகளில் பரதனுக்கு அமைதி கூறுகிறான். நீ தந்த அரசையான் ஏற்றுக்கொண்டேன் என்றே வைத்துக்கொள். இப்பொழுது யான் அரசனாகி விட்டேன். ஆனால், எனக்கு இருக்கும் வேறு அலுவல் (காட்டில் 14 ஆண்டுகள் வாழவேண்டுவது) காரணமாக உன்னை அரசனாக நான் நியமிக்கிறேன். என் ஆணையை ஏற்று நீ பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவாயாக’ என்கிறான் இராமன். நீ தந்த பாரகந் தன்னை அந்த நாள் எலாம் (யான் இல்லாத நாள் எல்லாம்) என் ஆணையால் நீ ஆள்க, என்கிறான். இவ்வாறு இந்த அரிய பாடலுக்குப் பொருள் கூறாமல், பிறர் இடர்ப்படுவர். பரதன் வாதத்தைத் தப்ப முடியா திருந்த இராமன் அறிவுத்திறத்தால் பரதனும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிபைக் கூறிவிட்டான். மேலும், தசரதன் கட்டளை இட்ட பொழுதுதான் அவனுடைய ஏவலுக்கு அஞ்சி முடிசூட உடன்பட்டதை இப்பொழுது