பக்கம்:தம்பியர் இருவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தம்பியர் இருவர்

இராமன் கூறியதைப் பரதன் ஒப்புக்கொள்கிறான். அவ்வாறாயின், இப்பூமி முறைப்படி பரதனைச் சேர்ந்தது என்பது உறுதிதான். ஆனால், உரிமையுடையவனாய பரதன் தன் உரிமை அரசை யாருக்கு வேண்டுமாயினும் அளிக்கலாமல்லவா? இதோ கூறுகிறான்!

  • முன்னர் வந்துஉதித்து உலகம் மூன்றினும்

நின்னை ஒப்பிலா பிே றந்தபார் என்ன தாகில்,யான் இன்று தந்தனன்; மன்ன! போந்துநீ மகுடம் சூடு, எனா'

i(கம்பன்-2486)

இப்பார் என்னுடையது என்று நீயும் கூறினாய்: யானும் ஒப்புகிறேன். இப்பொழுது என்க்குரிமையான இப்பூமியை

யானே உனக்குத் தருகிறேன்; வந்து ஆட்சி புரிக,' என்கிறான் வள்ளல் பரதன்.

பரதனுடைய இந்த வாதத்தின் முன்னர் இராமன் அயர்ந்துவிட்டான். 'பரதனுடைய பிடிவாதத்திற்கு மருந்தாக அமையும் என்று கருதி தான் கூறிய வாதம் தனக்கே இடையூறாய் வந்து சேரும் என்று இராமன் கருத வில்லை, பரதன் வலுவாக இப்புதிய வாதத்தைப் பிடித்துக் கொண்டான் என்பதைக் கண்ட இராமன், இப்பொழுது வேறுவழியில் பேசமுற்படுகிறான். இனிப் பரதனிடம் வாதஞ்செய்து பயனில்லை. எ ன ேவ, அன்பினால் அவனுக்கு ஆணை இட்டுவிட்டாலோ இராமன் இட்ட் ஆணையை மறுக்கப் பரதன் அஞ்சு வான். எனவே, பரத னுடைய இவ்வச்சத்தையே துணையாகக் ந:கெர்ன்டு இராமன் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முன்ந்து விட்டான். இதற்கு முன்னரும் குகனுடைய அன்பில் தோன்றிய வற்புறுத்தலுக்கு அஞ்சிய இராமன் குகனிடத்தி விருந்து விடைபெற முயலும் பொழுது அன்பினால் இடும் ஆணை வழியையே மேற்கொண்டான். இவ்வொரு வழியாலன்றிக் குகனைத் தன்னிடமிருந்து பிரிக்கவியலாது.