பக்கம்:தம்பியர் இருவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 05

சொல்லைக் காக்கவேண்டுவது தனயன் பொறுப்பு என்பதையும் எடுத்துக் காட்டினான். இறுதியாக அயோத்தி அரசின்மேல் தனக்கு உரிமை இல்லை என்றும், கைகேயி மகனாய்ப் பிறந்த காரணத்தால் பரதனுக்கே அது உரிமை யாய் விட்டதென்றும் எடுக்காட்டுகிறான்.

' வரனில் உங்தைசொல் மரபி னால்உடைத்

தரணி நின்னதென்று இயைந்த தன்மையால் உரனில் பிேறந்து உரிமை ஆதலால் அரசு கின்னதே; ஆள்க!' என்னவே'

(கம்பன்-24 85)

என்னும் இப்பாடலுக்கு உரை வகுத்தவர்கள் நேர்மை யாகப் பொருள் கொள்ளாமையின், நல்ல முறையில் இராமன் வாதத்தை அறிய முடியவில்லை. முதலிரண்டு அடிகளின் பொருள்: வரந்தந்த உந்தை முன்னர்க் கொடுத்தவாக்குப்படி இத்தரணி உனதாகும்படி பொருந்தி விட்டது (இது கைகேயியை மணஞ்செய்துகொள்ளும் பொழுது தசரதன் தன் அரசை அவளுக்குச் சீதனமாகத் தந்துவிட்டான் என்ற வான்மீகக் கதையை உட் கொண்டது.) என்பது. பின் இ ரண்டடிகளின் பொருள்: 'வலிமை பொருந்திய நீ பிறந்து விட்டமையின் உன் தாய்க் குரிய இவ்வரசு உனக்கு உரிமை வழி வந்தது ஆகலின், இவ்வரசு நின்னதேயாகும், என்னும் இவ்வாதத்தை இராமன் கூறினவுடன் பரதன் பேச்சு முறை மாறி விடுதலைக் காணலாம். இது வரை இராமனுக்குரிய அரசைத் தந்தை தனக்குத் தந்து பெருந்தவறு இழைத்து விட்டான் என்றும், தாய் வரமாக அதனைப்பெற்று அவளும் தவறு இழைத்து விட்டாள் என்றும் (2479). கூறிய பரதன், இராமன் கூறியதைக் கேட்டவுடன் தன் வாதத்தை மாற்றிவிடுகிறான். இராமன் கூறியதில் உள்ள இப்புதிய கருத்தை அறிந்து கொண்ட பரதன், வே

விதமாகக் கூறி இராமனை வற்புறுத்துகிறான். -