பக்கம்:தம்பியர் இருவர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 தம்பியர் இருவர்

இவ்வாறு கூறித் தன்னைப் பற்றித்தான் கொண்டுள்ள கருத்தைப் பிறர் அறியக் கூறிய பரதன், இனி இராமனது முதற்கேள்விக்கு விடைகூற முற்படுகிறான். ஏன் முடி சூடவில்லை?” என்பது தானே முதற்கேள்வி? முதல் மகனாய்ப் பிறந்த காரணத்தால் உனக்கே உரிமையான அரசை நீயே விட்டுத் துறவு பூண்டால், அதற்காக யான், அறத்தை வாளினால் கொன்று தின்றதை ஒப்ப,

அ வ் வ ர ைச ஆளத் தொடங்குவேனோ!" (2475) என்றான். இவ்வாறு பேசி வரும்பொழுதே அவன் மனத்தில் ஒர் எண்ணம் தோன்றுகிறது. பகைவன்தானே

சமயம் அறிந்து இவ்வாறு அரசை வெளவக் காத்திருப் பான்? யான் என்ன அத்தகைய பகைவனா? என்னுங் கருத்தால்,

'வகையில் வஞ்சனாய் அரசு வவ்வயான்

பகைவனேகொலாம் இறவு பார்க்கின்றேன்!” - (கம்பன்-2:176)

என்று கூறுகிறான். இதிலிருந்து பரதனுடைய அடக்கமும், அன்பும், ஆழ்ந்த அறிவும் புலனாகாமற் போகா. இதனை யடுத்து, தந்தை தீமையும், தாய் செய்த தீமையும் நீங்க நீ வந்து அரசு புரிக, (2477) என வேண்டினான். அவன் சொற்களையும் அச்சொற்களின் அடியில் உள்ள துயரத்தை யும் கண்ட இராமன், துணுக்கம் எய்தினான்.

'சொற்ற வாசகத் துணிவு உணர்ந்தபின்,

"இற்ற தோஇவன் மனம்! என்று எண்ணுவான்.”

," - (கம்பன்-2378)

என்று இராமன் மனத்தில் தோன்றிய அச்சத்தைக் கவிஞன் வெளியிடுகிறான். அவனது உள்ளம் இற்றுவிட்டதோ என்று ஐயுற வேண்டுமாயின், பரதன் துயரம் எவ்வளவு ஆழ

முடையதாயிருந்திருக்கும்? . இவ்வகை மனநிலையில் உள்ள பரதனைத் தேற்று வதற்கு இராமனே அரும்பாடு படுகிறான்; தந்தை