பக்கம்:தம்பியர் இருவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் İ İ ]

இவ்வாறு அரற்றுகிற நேரத்தில் இராமன் வனஞ்சென்ற செயலைப் பரதன் அறியவில்லை; எனவே, இராமன்

அரண்மனையில் இருப்பதாகவே நினைந்து தான் இவ்வாறு

கூறுகிறான்.

அடுத்துத் தந்தையின் கொடைச் சிறப்பு நினைவிற்கு வருகிறது. இவ்வுலகத்தில் வாழ்பவர் யாவரேயாயினும், தசரதனால் கொடை பெற்றவராகவே இருத்தல் கூடும். தன்னால் கொடை பெறப்பட்டாருடன் சமமாக நட்பும் பாராட்டி வாழ் த ல் இயலாததொன்று. எனவே, நைட்பாளர் வேண்டும் என்பதற்காக மேலுலகத்தில் அவர்களை நாடிச் சென்றனையோ?” என்கிறான்.

கண்பினார் அவ்வழி உலகினில் உளர்கொ லோஜயா!'

- (கம்பன்-2152):

அடுத்துத் தசரதனது வீரம் நினைவிற்கு வருகிறது. முன்னொரு காலத்தில் சம்பராசுரனைத் தொலைக்க மேலுலகம் சென்றானே! இப்பொழுதும் போயிருப்பதால் அங்கே சம்பரன் போன்றார் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்கிறான்.

'சம்பரன் அனையஅத் தானைத் தானவர்

அம்பரத்து இன்னமும் உளர்கொ லோஐயா !” -

(கம்பன்-2154)

இவ்வாறு தந்தையின் பண்பாட்டை ஓயாது நினைத்து உருகும் பரதனுக்கு மீட்டும் இராமன் மாட்டுத் தசரதன் கொண்ட கழிபேரன்புதான் நினைவிற்கு வருகிறது; மிகுதியும் வருந்துகிறான். நின்னால் மிகுதியும் அன்பு செய்யப்பெற்ற இராமன் வளர்ந்து பெரியவனாகியுங்கூட ஆணை ஆழியை அவன் கைகள் ஏந்தாமல் வீணாய்: இருக்கின்றன என்பதற்காக ஆழியை அவனிடம் தர வேண்டி நீ இறந்தனையோ? என்கிறான்.