பக்கம்:தம்பியர் இருவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I l 2 தம்பியர் இருவர்

‘ஏழுயர் மதகளிற்று இறைவ! ஏகினை வாழிய கரியவன் வறியன் கைஎனப் பாழியம் புயத்துகின் பணியின் நீங்கலா ஆழியை இனிஅவற்கு அளிக்க எண்ணியோ?”

(கம்பன்-2 56)

தசரதன் இராமனுக்கு முடி சூட்ட நினைந்து மந்திர ஆலோசனை நடத்தி நாளும் குறிப்பிட்டு, இறுதியில் அது நடைபெறாமல் போன செய்தியும், இராமன் காடு சென்ற செய்தியும், அத்துயரம் தாளாமல் தசரதன் இறந்த செய்தி யும் அறியாத பரதன் இப்பொழுது இவ்வாறு பேசுவது நம் வருத்தத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. பரதன் இவ்வாறு பேசும் பொழுது அதற்கு முன்னர் நடை பெற்றவைகளை நாம் அறிவோமாகலான், இதில் உள்ள பொருத்தமின்மையை அறிந்து மேலும் வருந்துகிறோம். ஆனால், இவ்வாறு பேசும் பரதன் நடந்தவற்றுள் ஒன்றையும் அறியாதவனாய்ப் பேசுகிறான் என்பதையும் மனத்துட்கொள்ள வேண்டும். தசரதன் இவ்வாறு சென்று விட்டதை நினைக்க நினைக்க அவன்மேல் பரிவு உண்டா கிறது. ஐயோ! பாவம்! இராமனை அவ்வளவு காதலித்த தசரதன் அவ்விராமனுக்கு முடி சூட்டு விழாவை நடத்தித் தன் கண்களால் பார்க்கத் தவம் பண்ணவில்லை போல இருக்கிறது!’ என்று அழுகிறான்.

பற்று.இலை தவத்தினில்: பயங்த மைந்தற்கு முற்றுஉலகு அளித்து அது முறையின் எய்திய கொற்றகல் முடிமணக் கோலம் காணவும் பெற்றிலை போலும்கின் பெரிய கண்களால்!”

(கம்பன்-2151)

முடிசூட்டு விழாவைப் பாராது உயிரை விடத் தசரதன் விரும்பாமல் போராடியதும், விதி அவனை வெற்றி கொண்டதையும் நாம் அறிவோம்; பரதன் அறியான். அறியாமலே இவ்வாறு நடந்தவற்றை நடவாதது போலப்