பக்கம்:தம்பியர் இருவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 13

பேசுவதை நாடகக் குறிப்பு' என்று கூறுவர் திறனாய் வாளர்.

இவ்வாற்றல் மொழிகளிலிருந்து அடக்கமே வடிவாய் இருந்தும் பரதன் தந்தை மாட்டு எவ்வளவு அன்பு வைத்திருந்தான் என்பது தெற்றெனப் புலனாகும். தந்தை என்பதற்காக அவனிடம் அன்பு பாராட்டியதைக் காட்டி லும், இராமனைப் பெற்றவன் என்பதற்காகவும், தன்னால் மிகுதியும் போற்றப்பட்ட இராமனை அவனும் மிகுதியும் விரும்பினான் என்பதற்காகவுமே தசரதன்மேல் பரதனுக்கு அன்பு ஏற்பட்டதோ என்றுகூட நினைய வேண்டியுளது.

பரதனும் பெற்ற தாயும்

அறத்தின் வடிவை, செம்மையின் ஆணியை, நீதி ஆறு புகமண்டும் கடலைப் பெற்றெடுத்த பெரும் பேறு உடையவள் கைகேயி. எவ்வளவுதான் அவள் தீயவளாக மாறிடினும், இதனை நாம் மறத்தற்கில்லை. இத்தகைய பரதன் தீய பண்புடைய ஒருத்தி வயிற்றில் தோன்றல் இயலாது. இயற்கையில் நற்பண்புடையவளாய அம்மாதரசி பெற்றதால் இந்நற்பண்புகள் அவனுடன் பிறந்தன. சேர்க்கை காரணமாகப் பின்னர் கைகேயி மனம் திரிந்தது உண்மைதான்.

'மனத்து உளதுபோலக் காட்டி மாந்தர்க்கு

இனத்துஉள தாகும் அறிவு.” (திரு.-54) என்று பொதுமறை வகுத்த சட்டத்திற்குக் கைகேயி எளிதில் இலக்கியமாகிவிட்டாள். ஆனால், கோசலை

1. Dramatic Irony திறனாய்வாளர் கூறும் நாடகக் குறிப்பு என்பதற்கு இது முற்றிலும் இலக்கியமாகாவிடினும், ஒரளவு அப் பெயருக்குப் பொருத்தமுடைய நிகழ்ச்சியேயாகும்.

த.-8