பக்கம்:தம்பியர் இருவர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தம்பியர் இருவர்

இவ்வாறு இல்லை. எனவே, நற்பண்புகளுடன் பிறந்த கைகேயி மைந்தனாகிய பரதன் அப்பெருமாட்டியால் வளர்க்கப் பெற்றமையின், அவன் பண்புகள் மேலும் வளர்ச்சியடைந்தன. கைகேயி இடம் வளர்ந்த காரணத் தாற்போலும் இராமன் இரண்டொரு சிறு பிழைகளை யாவது செய்யப் பரதன் பிழை என்று கூறக்கூடியது ஒன்றையும் கனவினும் கருதாதவனாய் வளர்ந்துவிட்டான்! கோசலை இராமனை நோக்கி, பரதன் நிறைகுணத்தவன்; நின்னினும் நல்லன், என்று கூறத்தக்க நிலையையும் அடைந்துவிட்டான்.

பிறந்தது தவிரப் பரதன் வளர்ந்து முழுதும் கோசலை இடத்தில் ஆகலான், கைகேயியிடம் தாயிடம் மகன் செலுத்த வேண்டிய அன்பைப் பரதன் செலுத்தினானா என்று ஆய்வதற்கு இல்லை. தாய் என்று அவன் உரிமை பாராட்டுவதெல்லாம் கோசலையிடத்திலாகும். கைகேயி யைப் பரதன் சந்தித்துப் பேசும் முதலிடமே அவ்வளவு சரி யாய் இல்லை என்று கூறலாம். கேகய நாட்டிலிருந்து 'இராமனைப் பார்க்க வேண்டும், என்னும் ஆவல் தூண்ட, நாளும் பொழுதும் குறிக்காமலே புறப்பட்டு வந்து விட்டான் பரதன். அயோத்தியினுள் நுழைந்ததும் களை இழந்து வெறிச்சென்று இருக்கும் நகரத்தைப் பார்த்ததும் அவன் மனம் துணுக்கம் அடைகிறது. உடன் வரும் சத்துருக்கனனைப் பார்த்து, இளையோய், மன்னன் வைகும் தலைநகர்போல இல்லையே இது! இதென்ன நிலை?’ என்கிறான்.

'மன்னன் வைகும் வளங்கர் போலும்ஈது

என்ன தன்மை? இளைய னே!” என்றான்.

(கம்பன்-2137)

இது கேட்ட இளையவன் மறுபடியும் ஒரு நாடகக் குறிப்புத் தோன்றுமாறு திருநகர்த் திருத் தீர்ந்தன ளாம்,' என்றான். சீதை அ ேயாத் தி ைய விட்டுச்