பக்கம்:தம்பியர் இருவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I l 5

சென்றதைச் சோதரர் இருவரும் இன்னும் அறியவில்லை. அரண்மனையுட் சென்ற பரதன் தந்தை இருக்கக் கூடிய இடங்கள் அனைத்திலும் தேடும்பொழுது கைகேயி அழைப் பதாக ஒருத்தி வந்து கூறலும் தாயிடம் ஒடுகின்றான் தந்தையைப் பற்றித் தகவல் அறிந்துகொள்ள!

இவ்வளவு அவசரத்தில் ஒடினாலும் தாயைப் கண்டவுடன் பண்பாட்டை மறந்து, தந்தை எங்கே?' என்று அவன் கேட்கவில்லை. அவனுடைய அடக்கத்திற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டு. தாயைக் கண்டவுடன் தன் அவசரத்தையும் படபடப்பையும் உள்ளடக்கிக் கொண்டு அவளை வீழ்ந்து வணங்குகிறான் அப்பெருமகன். தவறு நேர்ந்திருப்பின் அவளே அதனை அவனுக்கு எடுத்துரைத் திருப்பாள் அல்லவா? அவ்வாறு செய்யாமல் அவள் தன்னுடைய தந்தை, தமையன்மார், சுற்றத்தார் முதலிய யாவரும் நலமா என்ற வினாக்களை வரிசையாக அடுக்கு கிறாள். பரதனுக்கு இது பெருவியப்பாய் இருக்கிறது. தீங்கிருப்பின் அதனை முதலில் கூறாமல் சாவதானமாக ஒவ்வொருவருடைய நலத்தையும் கேட்கும் தாயை என்னென்பது! அவன் மனம் தத்தளிக்கிறது. அவற்றை யெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு அவள் வினவிய அனைத்து வினாக்களுக்கும் ஒரே சொல்லில் விடை கூறி விட்டான்.

  • தீதிலர் எந்தை, என்ஐயர் ஏனையர்?’ என்றனள்,

அந்த மில்குணத் தானும், அது ஆம்,” என்றான்.

(கம்பன்-2143)

இந்த வினா முறையில் பரதனும் ஓரளவு பொறுமை இழந்துவிட்டான்; எனினும், அதனைக் காட்டிக் கொள்ளாமல் உள்ளம் விம்முவானாய்க் கோமகன் யாண்டையான்? பணித்திர், என்று இருகை கூப்பினான்.” இனிமேலும் தன் கேள்விக்கு விடை இறுக்காமல் அவள் கேள்விகள் கேட்க வேண்டா என்பதற்காகப்போலும்