பக்கம்:தம்பியர் இருவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 தம்பியர் இருவர்

இருகை கூப்பினான். அவன் உள்ளத்தில் தோன்றிய விம்மலை அத்தாய் அறியாமலா இருந்திருப்பாள்? அவ்வாறு அறிந்திருந்தும், தன் அருமை மகனுடைய துய்ரத்தில் பங்கு கொள்ளாததன் காரணம் யாது? இறந்து போன தசரதன்மேல் அன்பு வற்றியிருப்பினும், அருமை மகனைக் கண்டவுடனாவது அவள் அழுகை பீரிட்டு வெளி வந்திராதா? கைகேயி பரதனுடைய நிலை கண்டும் மனங் கலங்கவில்லை. அவள் மனம் கல்லாகிவிட்டது. மகனுடைய வினாவிற்கு இதோ விடை இறுக்கிறாள் தாய்.

' ஆனவன் உரைசெய அழிவில் சிங்தையாள்,

"தானவர் வலிகெட கிமிர்ந்த தானை அத் தேன்அமர் தெரியலான் தேவர் கைதொழ வானகம் எய்தினான்; வருந்தல் நீ,” என்றாள்'

(கம்பன்-214.5)

தசரதன் இறந்ததைக் குறித்து அவனுடைய காதல் மனைவி பேசும் சொற்களா இவை? வழியில் போகிறவர் களைப் பரதன் கேட்டிருந்தாற்கூட அவர்கள் மிகவும் பரிவுடன் விடை கூறியிருப்பார்களே! ஏனோ கைகேயி இவ்வளவு பொறுப்பற்ற முறையில் விடை கூறிவிட்டாள்! தன்னுடைய கணவன் இறந்ததைப் பற்றி அவள் கூறு வதாக இப்பாடலை முதல் முறை படிப்பவர் யாரும் பொருள் கொள்ள முடியாதே! பரதனுடைய துடிப்பைக் கண்டாவது அவள் சற்றுப் பரிவு காட்டியிருத்தல் ஆகாதா? இவ்விடையைக் கேட்ட நமக்கே மனம் துடித்து அவள்மேல் கோபமும் வருகிறதே! இதனைக் கேட்ட பரதனுக்கு எத் துணைச் சினம் தோன்றியிருக்கும்! அவள் செய்த சூழ்ச்சி யாலேதான் தசரதன் இறந்தான் என்று அவன் அறிந் திருப்பின் பெருஞ்சினம் கொண்டிருப்பான். ஆனால், அதை அவன் இன்னும் அறியவில்லையாகவின், தன் தாய் ஏன் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் கணவன் சாவைப் பற்றிக் குறிப்பிட்டாள் என்பதை அறிய முடியாமல் தவிக்

கிற்ர்ன் பரதன்.