பக்கம்:தம்பியர் இருவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I I W

அவள் சொற்களைக் கேட்ட பரதன், நெறிந்து அலர் குஞ்சியானாய், நெடிது வீழ்ந்து, அறிந்திலன், உயர்த் திலன்.’’ சிறிது தெளிந்து எழுந்தான்; முக ஒளி மழுங்கத் தன் அலர்ந்த தாமரை ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தர’’ இதோ பேசுகிறான். எல்லை கடந்த கோபத்திலும், எல்லை கடந்த மகிழ்ச்சியிலும், துயரத்திலும் ஒருவன் பேசும் சொற்களைக் கொண்டே அவனுடைய பண்பாட்டை நன்கு அறியலாம்.

"ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.’

(திரு.-139)

என்ற பொதுமறை ஆழ்ந்த அனுபவத்தின்மேல் தோன்றிய தன்றோ? மனிதன் சாதாரண நேரங்களில்தான் பேசும் சொற்களை ஆய்ந்து அளந்து பேசுகிறான். ஆனால், அளவு மீறிய உணர்ச்சியில் ஆய்ந்து அளந்து பேசுதல் இயலாத காரியம். அத்தகைய நேரங்களில் அவனிடமிருந்து எவ் வகையான சொற்கள் வெளிவருகின்றனவோ, அவை அவனுடைய அகமனத்திலிருந்து வருபவை அல்லவா? இத் தகைய ஒரு கோப நிலையில் இதோ பண்பட்ட பரதன் பேசுகிறான்.

தீஎரி செவியில்வைத்து அனைய தீயசொல்

tஅலது உரைசெய நினைப்ப ரோ!’ என்றான்.

(கம்பன்-2147)

நெருப்பைக் காதில் வைத்தது போன்ற இக்கொடிய சொற்களை இவ்வாறு கவலை சிறிதும் இல்லாமல் கூறு வதற்கு உன்னைத் தவிர வேறு யாராவது நினைப்பார் களா அம்மா!' என்கிறான். பண்பாட்டின் உச்ச நிலையில் நிற்கும் பரதனுடைய இச் சொற்கள் அவனுடைய அக மனத்திலிருந்து எழுந்தவையாகலின், அவனைப்பற்றி நாம் நன்கு அறிய உதவுகின்றன. -