பக்கம்:தம்பியர் இருவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置芷& தம்பியர் இருவர்

மற்றோர் இலக்கியத்தில் வரும் இத்தகையதோர் இடத்தைக் காணல் நலம் பயக்கும். அப்பூதியடிகள் என்ற அந்தணர், திருநாவுக்கரசர் சமணர்கள் செய்த தீமைகளை எல்லாம் இறைவன் அருளால் வென்று உயிருடன் மீண்ட தைக் கேள்விப்பட்டார்; அவரிடத்து மீளாக் காதல் கொண்டார்; தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் அனைத் திற்கும் நாவுக்கரசு என்ற பெயரையே இட்டார்; பெரிய தண்ணீர்ப்பந்தலை வைத்து, அதற்கு 'நாவுக்கரசு தண் aர்ப் பந்தல்' என்றும் பெயரிட்டார். இவ்வளவிற்கும் அவர் நாவுக்கரசரை ஒரு முறை கூடக் கண்டதில்லை. இவ் வாறு அவர் வாழும் நாளில் ஒருமுறை திருநாவுக்கரசரே அவரைக் காணவந்தார். அவர்தாம் நாவுக்கரசரென்பது அப்பூதியடிகளுக்குத் தெரியாது. வந்தவரை அவர் உபசரிக்கும் பொழுது வந்த பெரியவர் அப்பூதியடிகளைப் பார்த்து, ஐயா, நீர் வைத்த தண்ணீர்ப்பந்தலில் நும் பேர் எழுதாதே வேறு ஒரு பேர் எழுத வேண்டிய காரணம் யாது?’ என்று வினவினார். தம்மால் போற்றி வழிபடப் படும் ஒருவருடைய பெயரை இவ்வளவு பொறுப்பற்ற முறையில் வேறு ஒரு பேர்’ என்று கூறி விட்டார் அல்லவா பெரியவர்: அப்பூதியடிகளுக்கு அளவு மீறிய சினம் பொங்கி விட்டது. தம்மை மறந்த நிலையிலும் பண்பாட்டை மறவாமல் அப்பூதியடிகள் பேசுகிறார். х

'கின்றமறை யவர்கேளா கிலைஅழிந்த சிந்தையராய் 'கன்றுஅருளிச் செய்திலீர்!". எனவெகுள்வார்’

(அப்பூதி. புராணம் 13)

நிலை அழிந்த சிந்தையிலும் அப்பூதியடிகள் வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் எவை தெரியுமா? ஐயா, நீர் நல்ல வார்த்தை சொல்லவில்லை' என்பதுதான்.

இதே போலப் பரதனும் தன்னை மறந்த நிலையிலும் பண்பாடு குறையாமல் தாயிடம் பேசுகிறான். எத்தகைய சூழ்நிலையிலும் தன் பண்பாட்டை மறவாத இம்மனநிலை