பக்கம்:தம்பியர் இருவர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 1 9

தான் பரதனை ஆயிரம் இராமர்கட்குச் சமானமானவ னாகச் செய்தது என்பதை நினைவிற் இருத்தல் வேண்டும்.

தாயின்மேல் உண்டான சினத்தைக் காட்டிலும் தந்தையை இழந்த துயரம் மிகுதியாகி விட்டதால், பரதன் உடனே தந்தையை நினைந்து புலம்பத் தொடங்கி விட்டான். இந்த நிலையில் தந்தையின் சாவுக்குத் தாயே காரணம் என்பதைப் பரதன் கனவிலும் கருதினவனல்லன். ‘சாவு’ என்பது பிறந்தவர் அனைவர்க்கும் இயற்கையாக வந்து தீர வேண்டிய ஒன்றுதானே? எனவே, ஒருவர் இறந்த தற்காக மற்றவர்மேல் சினம் கொள்வது அறியாமையின் பாற்படாதோ? ஆதலால், பரதன் தாயின் மேல் சினங் கொள்ளவில்லை. அவள் மேல் குறை கூறுவதாயிருப்பின், பொறுப்பற்ற முறையில் இதனை அறிவித்தானே என்பது தவிர, வேறு குறை காண்டல் இயலாது. எனவே, தந்தை இயல்பாகவே இறந்தான் என்று கருதியே பரதன் புலம்பு கிறான்.

திடீரென்று இச்செய்தியைக் கேட்டதால் உண்டான பெருந்துயரம் ஓரளவு குறைந்தது. உடனே பரதனுக்கு இராமனின் நினைவு வந்துவிட்டது. சிறிதும் பரிவு காட்டாத தாயிடம் பேசுவதால் துயரம் குறையாது ஆகலின், தன் வந்தனைக்கும் அன்புக்கும் உரியவனான இராமனிடம் சென்றாலாவது தன் துயரம் ஆறாதா என்று கருதிய பரதன்,

அந்தம்இல் பெருங்குணத்து இராமன் ஆதலால் வந்தனை அவன்கழல் வைத்த போதுஅலால் . சிங்தைவெங் கொடுந்துயர் தீர்க லாது!’ என்றான்.

(கம்பன்-2159)

இவ்வார்த்தைகள் கைகேயியை நோக்கிக் கூறப்பெற்றவை அல்ல; பரதன் தனக்குத்தானே பேசிக் கொண்ட சொற்கள் என்றாலும், இவ்வாறு கூறும் அவன் இராமனைத் தேடிச் சென்று பிறர் மூலம் கேள்விப்படுதலைக்காட்டிலும் தானே