பக்கம்:தம்பியர் இருவர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

双2莎 தம்பியர் இருவர்

கூறிவிடுவது நலம் என்று நினைத்தாள் போலும் கைகேயி: உடனே கூறத் தொடங்கிவிட்டாள்.

தெவ்வடு சிலையினோய்: தேவி, தம்பிஎன்று

இவ்விரு வோரொடும் கானத் தான்’ என்றாள்.

(கம்பன்-2 60) கைகேயி தானே ஏற்படுத்திய சிக்கலில் சிக்கி அறிவை இழந்துவிட்டாள் என்பதற்கு இதைவிடச் சான்று வேறு வேண்டும்ோ? முன்னரே சினம் கொண்டு துடிக்கும் பரதனுக்கு இச்சொற்கள் மேலும் எவ்வளவு சினமூட்டும் என்பதை அவள் அறியாளா? இதைக் கூறினவுடன், ஏன் காடு சென்றான்?’ என்ற வினாத் தோன்றாதா? அப் பொழுது அதற்கும் தான் விடை கூற வேண்டியிருக்குமே! ஏன் இதுபற்றிக் கவலை கொள்ளாமல் கைகேயி இவ்வாறு நுணலும் தன் வாயாற் கெடுவது போலப், பேசுகிறாள்? இதுதான் அறிவு கலங்கியவர் செயல் என்று கூறப்படும். தானே இதனைப் பரதனிடம் கூறாமல் பிறரிடம் அவன் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டுவிட்டால் அவன் சினம் முழுவதும் அங்கேயே ஓங்கி அடங்கிவிடாதா? எதிரே கூறினால், பரதன் சினமிகுதியால் தவறுதலாக ஏதேனும் செய்துவிட்டால் என்ன ஆவது என்று அவள் நினைந்து பார்க்கவில்லையே! ஆம்! வரன் முறையாக நினைந்து பார்த்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் அறிவைக் கைகேயி இழந்து விட்டாள்.' .

கைகேயி கூறிய இச்சொற்கள் பரதன் காதில் பட்டன. ஆனால், ஒரு கணம் இவை எவ்வித உணர்ச்சியையும் அவனிடம் உண்டாக்கவில்லை. ஏன் தெரியுமா? சற்றும் பொருத்தமற்ற சொற்கள் நமக்கு எவ்வித உணர்ச்சியையும் உண்டாக்காமலிருப்பதில் வியப்பென்னை: த ந் ைத கிழவன்; அவன் இறந்தான், என்றால், அது நம்பக்கூடிய ஒன்று. ஆனால், தசரதன் இறந்தவுடன்-ஏன்?-இருக்கும்

1. அரசியர் மூவர். கம்பன் கலை