பக்கம்:தம்பியர் இருவர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் | 2 3

இவ்வாறு செய்திருப்பின் அது உலகத்தார் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டிய செயலாகவன்றோ இருக்கும்? இராமன் ஒன்றைச் செய்தான் எனில், அது பிறருக்கு நன்மை பயப்ப தாய் இருக்குமே தவிர, வேறு யாதாய் இருத்தல் கூடும்? இவ்வாறு நினைத்தவுடன் திடீரென்று பரதனுக்கு ஒர் ஐயம் பிறந்தது. இராமன் காடு சென்றது தன் தந்தை இருக்கும்பொழுதா அன்றி இறந்த பிறகா என்று கேட்கிறான் தாயை.

"ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல்-அப்

பூங்கழற் காவலன் வனத்துப் போயது தீங்கு இழைத் ததனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? யாதி னோ?’ எணா,

'தீயன இரர மனே செய்யு மேல்அவை

தாய்செயல் அல்லவோ தலத்துஉ ளோர்க்கெலாம்? போயது தாதைவிண் புக்க பின்னரோ, ஆயதன் முன்னரோ? அருளுவீர்,” என்றான்.”

(கம்பன்-2162, 63)

இவ்விரண்டாவது பாடலில் பரதனது மனப் பண்பை மிக நன்றாக அறிய முடிகிறது நம்மால். இராமன் மாட்டு அவன் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் எத்தகையன? 'இராமனா தீமை செய்வான்? என்று ஒரு வினாவை எழுப்பினான். அதற்கு ஆம்’ என்றோ, அன்று என்றோ யாரும் விடை கூறவில்லை. ஒரு வேளை தீமையே செய் தான் என்று யாரேனும் கூறுவாராகில், அதற்கும் விடை காண்கிறது அவனுடைய பண்பட்ட உள்ளம். இராமன் செய்தவற்றில் நன்மை தீமை ஆராய்ச்சி செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது முறையா? ஏன் செய்யக்கூடாது என்கிறீர்களா? இதோ விடை கூறுகிறான் பரதன்.

ஒரு குழந்தையை வளர்க்கும் தாய் நிலைமைக்கு ஏற்பக் குழந்தைக்கு ஆகாரத்தையும் மருந்தையும்