பக்கம்:தம்பியர் இருவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 தம்பியர் இருவர்

தருகிறாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தை உணவை விரும்பிக் கேட்கும் பொழுது தாய் மறுத்துவிடுகிறாள்; அது விரும்பாத மருந்தைத் தருகிறாள். மருந்திலும் சில நேரம் இனிப்புடைய மருந்தையும் இன்னஞ் சில நேரம் கைப் புடைய மருந்தையும் அல்லவா தருகிறாள்? உணவை மறுத்துவிட்டுத் தாய் கைப்பு மருந்தைக் கொடுக்கும் பொழுது அத்தாயைக் காண்பார் யாராவது, இது கொடிய செயல்’ என்று கூறுவதுண்டா? ஆனால், தாயே கொடுப்பினும், கைப்பு மருந்து இனிப்புடையதாக மாறி விடுமா? கைப்புக் கைப்புத்தான், தாயே அன்புடன் கொடுத்தாலும். ஆனால், அதனைத் தந்த காரணத்தால் தாயைக் கருணை அற்றவள் என்றும் யாரும் கூறுவ தில்லையே! அதே போன்று, இராமன் ஒரு கொடுமை செய்துவிட்டான் என்றால், அதனைக் கொடுமை என்று கூறுவதைக்காட்டிலும் கொடுமை வேறு இல்லை. தாய் தந்த மருந்தைக் கொடுமை என்று கூறும் பொழுதுதான் இராமன் செயலையும் கொடுமை என்று கூறவேண்டும். அதனாலேதான் தீயன இராமனே செய்யும்?' என்று கேட்டான் பரதன். இவ்வினாவிலேயே இராமன் தீமை செய்யவே மாட்டான் என்ற விடை கிடைத்து விடுகிறது. ஒருவேளை அவன் நன்மை என்று கருதிச் செய்ததைப் பிறர் கொடுமை என்று கருதினால் என் செய்வது? அதற்கும் விடை கூறுகிறான் பரதன் இரண்டாம் அடியில். செய்யு மேல் அவை தலத்துளோர்க்குத் தாய்செயல் அல்லவோ?’ என்கிறான். இராமன் செயல்கள் அனைத்தையும் தாயின் செயலாகக் காணும் பரதனது பண்பாட்டை யாரே அளவிட்டு அறிய முடியும்? ஆம்! அவ்விராமனே தன் வாயால் அறத்தின் வடிவென்றும், செம்மையின் ஆணி என்றும் பரதனைப் புகழ்கிறான்.

மேலே கூறிய அனைத்துக் காரணங்களையும் தவறு. என்று கூறிவிட்டுக் கைகேயி அவனுடைய இறுதி வினா விற்கு மட்டும் விடை கூறுகிறாள். х