பக்கம்:தம்பியர் இருவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 135

'அருக்கனே அனையஅவ் வரசர் கோமகன்

இருக்கவே வனத்து.அவன் ஏகி னான்,' என்றாள்.

- (கம்பன்-2146)

இவ்வாறு கைகேயி கூறினவுடன் பரதன் தன்னுடைய இயல்பை மறந்து சினங் கொள்கிறான். இக்காரணங்கள் அனைத்தும் இல்லை என்றால், பிறகு இராமன் ஏன் காடு சென்றான்? தசரதன் ஏன் இறந்தான்? இவ்வினாக்களைக் கேட்கும் பொழுதே பரதன் மிக்க சினம் அடைகிறான். அவன் கூறிய காரணங்களுள் எதனாலும் இராமன் வனம் புகவில்லை என்று கைகேயி கூறினவுடன் அறிவுடைப் பரதனுக்கு ஒரு திகைப்பும் ஓர் ஐயமும் பிறக்கின்றன. 'இவை அனைத்தும் இல்லை என்றால், வேறு யாது காரணமாய் இருக்கலாம்!” என்பது திகைப்பு. ஒரு வேளை ஆம் ஒருவேளைதான், உறுதியாக அன்று, சிறிது கலக்கமே இல்லாமல் காட்சி அளிக்கின்ற இத்தாயே இராமன் காடு செல்லக் காரணமாய் இருந்திருப்பாளோ! இந்த ஐயம் தோன்றினவுடன் அவனையும் அறியாமல் பரதனுடைய சினம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்க ஆரம்பிக்கிறது. காரணத்தை உறுதியாக அறிந்து கொள்ளாமல் அவள் மேல் சினங்கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே, அவனுடைய சினம் அவனுடைய வினாவில் குறிப்பாக வெளிப்படுகிறது.

"குற்றம்.ஒன்று இல்லையேல், கொதித்து, வேறுளோர் செற்றதும் இல்லையேல் தெய்வத் தால்அன்றேல், பெற்றவன் இருக்கவே பிள்ளை கான்புக உற்றது என்? பின் அவன் உலந்தது என்?’ என்றான்.

(கம்பன்-21 )ே

முன்னர் அவன் கேட்ட வின்ாக்களுக்கும் இப்பொழுது வினாவும் வினர்க்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்க முடியாது. உள்ளே பொங்கிவரும் சின்த்தை அடக்கிப் பேசும் முயற்சி இக்கேள்விகளில் புலப்