பக்கம்:தம்பியர் இருவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தம்பியர் இருவர்

படவில்லையா? அதிலும் பெற்றவன் இருக்கவே பிள்ளை கான்புக உற்றது என்?' என்ற வினாவிலேதான் எத் துணைச் சினமும் வெறுப்பும் அடங்கியிருக்கின்றன! இக் கேள்வியைக்கூட முறையானது என்று கூறிவிடலாம்.

ஆனால், இரண்டாம் வினாவிற்குக் காரணம் யாது: ஒருவனை எவ்வாறு இறந்தான்? என்று கேட்பது முறை. "ஏன் இறந்தான்? என்பது முறையற்ற வினா . ஏன் இறந் தான்?' என்று கேட்கும் பொழுதே கேட்படுபவர் மற்ற வனுடைய சாவுக்குக் காரணமோ என்று ஐயப்படும் மனம் வெளிப்படவில்லையா? பின் அவன் (தசரதன்) உலந்தது. (இறந்தது) என்? என்ற வினாவைத் தாயைப் பார்த்து மகன் கேட்பதனால், அது மிக மிக வருந்தற்குரிய ஒரு செயல் அன்றோ? பண்பாடுடைய பரதன் தாயைப் பார்த்து இவ்வாறு கேட்கலாமா? இது அறமா? அறமன்று தான், மற்றொரு தாயிடம் மற்றொரு மகன் கேட்டிருப் பின். ஆனால், கைகேயிடம் பரதன் கேட்டால், இது முறை தான். அவன் அவளுடைய நடையுடை பாவனைகளைக் கொண்டு அவளே காரணமாகலாமோ என்று ஐயுற்றான். நமக்கு அது எவ்வளவு மெய்ம்மை என்பது தெரியும். ஆனால், அவனுக்கு முன்னர் நடைபெற்றவற்றுள் ஒன்றும் தெரியா தாகலான், அவள் மனநிலையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டே இவ்வாறு ஐயப்பட்டான் என்று நினைக்கும் பொழுது பரதனது அறிவுத்திறத்தை வியவாமல் இருத்தற்கு இயலவில்லை. இதோ அவனுடைய ஐயத்திற்கு விடை கிடைத்துவிடுகிறது. அவனுடைய வினாக்கள் அனைத்திற்கும் ஒரே பாடலில் கைகேயி விடை கூறி விடுகிறான்.

'வாக்கினால் வரம்தரக் கொண்டு, மைந்தனைப்

போக்கினேன் வனத்திடை போக்கிப் பார்உனக்கு ஆக்கினேன்; அவன்.அது பொறுக்க லாமையால் நீக்கினான் தன்.உயிர் நேமி வேந்து," என்றாள்.

(கம்பன்-216 6)