பக்கம்:தம்பியர் இருவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 39

யன்று! பரதன் கடவுளாய் இருப்பின் முறையன்றுதான். ஆனால் பரதனைக் கடவுள் என்று யார் கூறினர்? அவன் மனிதனே. மனிதனாகவே கம்பநாடன் அவனைப் படைத்து உலவவிடுகிறான். பரதன் மனிதனாகலின், அவனுக்கு இந் நேரத்தில் சினம் வாராமலிருந்தால், அதுவே தவறாகும்.

மனிதன் உயிரைக்காட்டிலும் சிறப்பாக மதிக்கும் பொருள்கள் சில உண்டு. அப்பொருள்களுக்கு யாரேனும் தீமை செய்வாராயின், அப்பொழுது அவன் சினம் கொள் வதில் தவறு இல்லை. பெரியவர் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு குறிக்கோள் இருக்கும். அக்குறிக்கோளை அவர்கள் உயிரினும் மேலாகப் போற்றுவார்கள்: அக் குறிக்கோளுக் காகவே உயிர்வாழ்வார்கள் எப்பொழுதேனும் அக்குறிக் கோளுக்குத் தீங்கு நேருமாயின், உயிரை விட்டேனும் குறிக் கோளை நிலைநிறுத்துவார்கள். இவ்வாறு செய்வதாலே தான் அவர்களைப் பெரியோர் என உலகம் மதிக்கிறது; மதித்துப் புகழவும் புகழ்கிறது. உலகில் தோன்றிய பெரியோர் அனைவரும், பெரிய புராணத்தில் கூறப்பெற்ற அடியார் அனைவரும் உட்பட, இவ்வகுப்பைச் சேர்ந்தவரே யாவர். இவர் அனைவருக்கும் தாம் கொண்ட குறிக் கோளே மிகவும் சிறந்தது. இன்னார் தம் உயிரை விட்டே னும் தம் கொள்கையை நிலை நாட்டுவர். இவர் தம் கொள்கைக்கு இடையூறு விளைப்பவர் யாவராயினும் சரி. அவரைக் கொன்றேனும் கொள்கையை நிறைவேற்றுவர்;

தந்தையின் காலைத் தடிந்த 'சண்டேசுரரும்: இறைவனைப் பழிப்பவர் நாவை அறுத்த சத்தியாரும்: அரசன் மனைவி என்றும் பாராமல் இறைவனுக்குரிய பூவை மோந்து பார்த்தமையின் அவள் மூக்கை அரிந்த - செருத்துணையாரும் இவ்வினத்தைச் சேர்ந்தவரே! -

1. பெரிய புராணம். சண்டேசுர நாயனார், 51

2. 3 : சத்தி நாயனார், 3

3. . 3 3 செருத்துணை நாயனார், 5.

த.-9