பக்கம்:தம்பியர் இருவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 * தம்பியர் இருவர்

  • எந்தையும் பாயும்எம் பிரானும் எம்முனும்

அந்தம்இல் பெருங்குணத்து இராமன்.” : I

(கம்பன்-2159) என்றே நினைந்திருந்தான். ஆதலால், அத்தகைய இராமனுக்குத் தீமை புரிந்தவர் யாவராயினும் அவர் அவனுடைய பகைவராவதில் வியப்பு ஒன்றும் இல்லை அன்றோ? இதோ அவன் சினங்கொள்கிறான்!

பரதன் சினம்

கூடின புருவங்கள்! குனித்துக் கூத்து கின்று ஆடின உயிர்ப்பிடை அனல்கொ ழுந்துகள் ஓடின! உமிழ்ந்தன உதிரம் கண்களே! 'துடித்தன கபோலங்கள்! சுற்றும் தீச்சுடர் -- பொடித்தன மயிர்த்தொளை புகையும் போர்த்தது! மடித்தது வாய்!நெடு மழைக்கை மண்பக - அடித்தன ஒன்றோடொன்று அசன் அஞ்சவே!’ -

(கம்பன்-2167, 168) பரதனுடைய இத்தாங்கருஞ்சினத்தைக் கண்டு,

அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் எனைப்பல சொரிம தத்தொளை எஞ்சின திசைக்கரி இரவி மீண்டனன்! வெஞ்சினக் கூற்றும்தன் விழிபு தைத்ததே!”

- (கம்பன்-2170)

சினம் கொளல் முறையா?

ஆ. ஈதென்ன வியப்பு: பரதனா இவ்வாறு சினங் கொண்டான்? பண்பாட்டின் வடிவமென்றும், நேர்மையின் ஆணி என்றும், அற்த்தின் திருவுரு என்றும், நீதியாறு புக மண்டும் கடல் என்றும் கூறப்பெற்ற பரதனா இவ்வாறு சினங்கொண்டான்? இது முறையா? என்று நினைக்கத் தோன்றுகிறதா? முறை அன்றுதான்! எப்பொழுது முறை