பக்கம்:தம்பியர் இருவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 3 'f

து.ாண்டுமா? பரதன் வெறுப்பான் என்பதை நன்கு அறிந் திருந்தும் அதனைச் செய்யத் தூண்டுமா? பரதன்மேல் அன்பு கொண்டவர் அவன் உடலைப் பேணி வைத்துக் கொண்டு அவனுடைய உயிரைப் பறித்து எறிய முன் வருவரோ? உண்மையில் கைகேயி செய்தது அத்தகைய செயற்கைதானே! பரத ன் உடலாகவும் இராமன் உயிராகவும் இருந்தார்கள் என்பதை ஒருவனைப் பெற்று மற்றொருவனை வளர்த்த அத்தாய் அறியமாட்டாளா? அறிந்துமா செய்தாள்? ஆம், அறிந்தேதான் செய்தாள். அவ்வாறாயின், அவள் தாய் அல்லள்! இது உறுதி. பரதன் இராமன் என்ற இருவருக்குமே அவள் தாயல்லள்.

கைகேயி என்ற பெண் ஒருத்திதான் இப்பொழுது எதிரே நிற்கிறாள். அதிலும், பரதன் என்னும் அரச குமாரனுடைய உயிரைப் பிரித்துக் காட்டுக்கு அனுப்பிய பெருங்குற்றத்தைப் புரிந்த ஒருத்தியே நிற்கிறாள்; மேலும், அவள் அறியாமையால் இதனைச் செய்யவில்லை; அறிந்தே செய்துள்ளான். அறிந்து ஒரு கொலையைச் செய்த அவள் மேல் சினங்கொள்வது தவறா? ஆம்! கொலை என்றாற் கூடக் கொலை செய்யப்பட்டவருடைய துயரம் உடன் ஒழிந்துவிடும். கைகேயி செய்தது அதனைக்காட்டிலும் மிக மோசமான ஒரு செயல். பரதனைக் கொன்றிருந்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவன் இறந்திருப்பான். ஆனால், அவன் வாழ்நாள் முழுவதும் இருந்து நினைந்து நினைந்து நையக் கூடிய ஒரு செயலை அன்றோ செய்துவிட்டாள்! கொலையினும் கேடான இத்தொழிலைச் செய்த அவளை என்னதான் செய்யக் கூடாது? அதிலும் அவனுக்காகவே இவ்விழிந்த செயலைச் செய்ததாக அவளே கூறினால், அது எவ்வளவு தவறானது? பரதன் நாடாள்வதற்காக இராமனைக் காட்டிற்கு அனுப்பினளாம்! உடம்பை வீட்டில் வைத்துவிட்டு உயிரைப் பிரித்துக் காட்டிற்கு அனுப்பினதோடல்லாமல், அவ்வாறு செய்ததை உடலின் நன்மைக்கே செய்தேன்,' என்று ஒருவர் கூறினால், அதனை