பக்கம்:தம்பியர் இருவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 தம்பியர் இருவர்

மன்னிக்கக் கூடுமா? இவ்வாறு பெருந்தவற்றைச் செய் தமைக்காகவே பரதன் அவள்மேல் சினங்கொள்கிறான்.

அவனுடைய சினத்தில் அவளைக் கொன்று விடமுடிவு செய்துவிட்டான். ஆ! பரதன் தாயைக் கொல்லக்கூட முடிவு செய்துவிட்டானா என்று வியப்புத் தோன்று கிறதா? தோன்றும்; நம்மைப் போன்றவர்கட்கே அவ்வாறு தோன்றும். வாழ்க்கையில் உண்டு உடுத்து இன்பமாக வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்ட நமக்குத் தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி என்றவர்களிடம் உரிமையை யும் கடமையும் உண்டு. அவர்களை நலத்துடன் பேணு வதே கடமை. தாய்க்கொலை என்பது நினைக்கவும் கூடாத பெருந்தவறுதான். ஆனால், வாழ்வில் கொண்ட ஒரு குறிக்கோளுக்கு எதனையும், தம்மை உட்படத் தியாகம் செய்யத் துடித்து நிற்பவர்க்கு இக்கடமைகள் பெரியன வல்ல. அவர்களுடைய குறிக்கோள்தான் பெரிதே தவிர, இடை நிற்போர் யாவராயினும், தாயேயாயினும், கவலை இல்லை.

அவ்வாறனால், அனைவரும் இந்தச் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளலாமா? தவறு செய்பவர் அைைவரும் இவ்வாறு கூறித் தப்பித்துக்கொள்ளலாமே என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் முடியாது. ஏன்? ஒவ்வொரு வரும் இத்தகைய சமாதானம் கூறிக்கொண்டு தாய்க் கொலை போன்ற தவறான செயலில் இறங்கும்பொழுது நாம் அவர்களுடைய செயலின் உண்மை பொய்ம்மைகளை எவ்வாறு அறிவது? அவர் கூற்றைத்தான் நம்பவேண்டுமே தவிர, அவர் உண்மையில் இதனைக் குறிக்கோளாகக் கொண்டவர் தாமா என்பதை எவ்வாறு ஆய்வது என்று தானே ஐயந்தோன்றுகிறது? கவலை வேண்டா. வெகு எளிதாக இதன் உண்மையைக் கண்டுவிடலாம்.

ஒருவர் தம் குறிக்கோளைப் பற்றியும் அதனைக் காக்க வேண்டுவதன் இன்றியமையாமை பற்றியும் எவ்வளவு