பக்கம்:தம்பியர் இருவர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 133

வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம். அக்குறிக் கோளை நிறைவேற்றுகையில் இடைநிற்போர் யாவ ராயினும் உதறி எறியத் தயாராகலாம். அது முறையா? என்ற வினாத் தோன்றுகிறது. இவ்வாறு எறியத் தயாராய் இருப்பவர் முதலில் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதுதான் வினா, குறிக்கோளைக் கொண்டு செலுத்து வதில் தம்முடைய உயிருக்கே தீங்கு நேருமாயின், அப் பொழுதும் அவர் விடாப்பிடியாகக் கொண்டு செலுத்து பவர்தாமா என்பதுதான் வினா. தம் உயிரைப் பற்றியும், அதனைப் பலி இடுவது பற்றியும் கவலையுறாமல் குறிக் கோளைக் கொண்டு செலுத்துபவர் யாவராயினும் அவர் கட்கே பிறரையும் பலியிடும் உரிமை உண்டு தம் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குறிக்கோளின் எதிரே பலியிடு பவர் பிறருடைய உயிரையும் பலியிடுவதில் தவறு இல்லை.

பரதனும் இத்தகைய இனத்தைச் சேர்ந்தவனே. தாயைக் கொல்லக்கூட அவன் சித்தமாகிவிட்டான். ஏன்? இராமனுக்குத் தீங்கு இழைத்தமைக்காகவே. அவ்வாறா யின், இராமன் பொருட்டுப் பரதன் உயிர் தேவைப் பட்டால் தருவானா? என்பதே வினா. உறுதியாகவும், மகிழ்ச்சியுடனும் அவன் உயிரை இராமன் பொருட்டுத் தருவான். அத்தகைய ஒரு வாய்ப்பை விரும்பி எதிர் பார்த்து அதற்கு மகிழ்ந்து தரக்கூடியவன் பரதன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பரதனுடைய வாழ்வின் ஒரே குறிக் கோள், இராமன் பொருட்டுத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் எனபதுதான். எனவே, அத்தகைய இராம னுக்குத் தீங்கு இழைத்தமைக்காகப் பரதன் கைகேயிமேல் சினங்கொண்டு அவளைக் கொல்ல முற்படுவானாயின், அவன்மீது யார் தவறு கூற முடியும்?

மேலும், பரதனைக் கைகேயி பெற்றிருக்கலாம். ஆனால், அவன் அவளைத் தாய் எனவே ஏற்றுக் கொள்ள வில்லை. அவள் ஒரு பெண், தசரதன் மனைவி என்ற அளவிலேதான் அவன் ஒப்புகிறான். அந்தப் பெண் இப்