பக்கம்:தம்பியர் இருவர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 தம்பியர் இருவர்

பொழுது பெருந்தீங்கை இழைத்துவிட்டாள்; அதுவும் அவனுடைய கண்கண்ட தெய்வமாகிய இராமனுக்கு. ஆகலின், இதோ பேசுகிறான். எந்தை இறந்தான்; என் தமையன் தவம் பூண்டான். இவை இரண்டும் உனது சூழ்ச்சியால் நிகழ்ந்தவை. இக்கொடுஞ்செய்தியை நீயே உன் வாயாற்கூறியும், அதனைக் கேட்டு நான் உன் வாயைப் பிளந்துவிடாமல் நின்றேன்! உன்னைச் சும்மா விட்டு நிற்பதே யான் இவ்வரசை ஏற்றுக் கொண்டது போலாகுமன்றோ? நீ இன்னம் இருக்கிறாய். யானும் நிற்கிறேன். ஏ!’ என்று கூறும் நேரத்துள் உன்னைக் கொன்று வீழ்த்திலேன்! தாய் என்ற காரணத்தாலன்று; இவ்வாறு செய்தால் இராமன் என்மேல் சினங்கொள்வான் ஆகலின், விட்டேன்!” என்ற கருத்துப்படக் கூறுகிறான்.

'மாண்டனன் எங்தை, என் தம்முன் மாதவம்

பூண்டனன் கின்கொடும் புணர்ப்பி னால்என்றால், கீண்டிலன் வாய்; அது கேட்டு கின்றயான் ஆண்டன னே அன்றோ அரசை ஆசையால்? இேனம் இருந்தனை: யானும் கின்றனன்; ஏஎனும் மாத்திரத்து எற்று கிற்றிலென்; ஆயவன் முனியும்என்று அஞ்சி னேன்.அலால், தாய்எனும் பெயர்எனைத் தடுக்கற் பாலதோ?”

(கம்பன்-217.2,273) *தாய் எனும் பெயர்’ என்று பரதன் கூறுவது அறிதற் பாலது. உண்மையில் நீ என் தாய் அல்லை. தாயாய் இருப்பின், என் மனக்கருத்தை அறிய முற்பட்டிருக்க மாட் டாயா? இதுவரை என் கருத்தும் வாழ்வின் குறிக்கோளும் யாவை என்பதை நீ அறிய மாட்டாயா? அறிந்தால், இவ்வாறு செய்யத் துணிவாயா? அறியாது செய்தாய் என்றால், உன்னைத் தாய் என்று கூறுவதன் பொருள் என்ன?’ என்ற கருத்துக்கள் உள்ளடங்கத் தாய் என்ற பெயர் பூண்டிருப்பதால் அது என்னைத் தடை செய்து விடுமா?’ என்று கூறுகிறான்.