பக்கம்:தம்பியர் இருவர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 135

அறத்தின் வடிவான பரதன், இராமன் என்ற தமையன் காட்டில் சென்று வருந்துவானே என்பதற்காக மட்டும் வருந்தவில்லை. பரதன் என்ற மனிதன், ‘இராமன் என்ற மனிதன் இவ்வாறு காட்டில் துன்புற நேர்ந்ததே! என்று வருந்துவது உண்மை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் காட்ட வேண்டிய அன்பு காரணமாகத் தோன்றும் வருத்தி மாகும் அது. அரசச் செல்வத்தில் பிறந்து வளர்ந்த இராமன் எவ்வித நலங்களும் இல்லாததும் துயரம் தருவது மான காட்டில் சென்று வாட நேர்ந்தது என்று நினைக்கை யில் பரதன் மனம் மெழுகாய் உருகுகிறது. இராமன் கனி யும் கிழங்கும் உண்ண, யான் மட்டும் அரிசிச்சோறு உண் பேனா!' என்கிறான்,

'கையார் கல்லைப் புல்அடகு உண்ணக் கலமேந்தி

ஐயோ! நான் இன் சாலியின் வெண்சோறு அமுதுஎன்ன நெய்யோடு உண்ண நின்றது கின்றார் கினையாரோ!'

(கம்பன்-21 82)

இவ்வகை வருத்தம் பரதனைப் பிடித்தது ஒருபுறம் இருக்க, இராமன் காடு சென்றதால் அறம் பிழைத்து விட்டதே! என்று வருந்துகிறான் அறத்தின் மூர்த்தி.

'மாளவும் உளன்.ஒரு மன்னன்; வன்சொலால்

மீளவும் உளன்.ஒரு வீரன்; மேயபார் ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால், கோள் அலது அறநெறி குறைஉண் டாகுமோ?” - - (கம்பன்-2174)

மேலே கூறிய அனைத்தும் நடைபெற்றுவிட்டதால், அறம் பிழைத்துவிட்டதே என்று வருந்துகிறான். அறத்தின் நாயகன் இராமன்', என்று பரதன் கருதியதே பரதனுடைய அன்பிற்குப் பெருங்காரணமாய் இருந்தது. இராமனுக்குச் செய்த தீமை அறத்திற்குச் செய்த தீமை என்றே பரதன் கருதுகிறான். அதற்குத் தீங்கிழைப்பதும், அவ்விழைத்த லுக்குத் துணையாக இருப்பதும், ஒருவர் இழைக்கப்