பக்கம்:தம்பியர் இருவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தம்பியர் இருவர்

பார்த்துக் கொண்டிருப்பதும் தவறான செயல்கள் என்பது கூற வேண்டுவதில்லை.

உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒருவன் எச்செயலைச் செய்வதாயினும், அதனுடைய அப்போதைய பிற்பட்டபயனை மட்டும் பாராமல், இதனைச் செய்தால் பிறர் என்ன நினைப்பர்?’ என்று ஆய்ந்தும் செய்யவேண்டும் என்பதுதமிழர் கண்ட முடிபாகும். சங்ககாலச் சான்றோர் கள் பாடிய பாடல்களில் இக்கருத்தைப் பரக்கக் காணலாம்.

"புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழினனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்.” (புறம்-1 82) 'குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக.” (புறம்-72) 'பழிதீர் ஆற்றல்” (புறம்-227)

'கழியக் காதலர் ஆயினும் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ (அகம்.-112)

செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ (திரு.-656)

'பிறர்பழியும் தம்பழிபோல் நாணுவார் நானுக்கு

உறையதி என்னும் உலகு” (திரு.-1015)

என்பன அச்சான்றோர் கூற்று. ஒருவனுடைய வாழ்வு அறவாழ்வாய் இருக்குமானால், அதில் பழி புகுதக் காரணம் இல்லை. ஊரில் உள்ளவர் ஒருவருமே தவறு கூற முடியாத படி ஒருவர் வாழ முடியுமா என்று கேட்கப்படலாம். அது இயலாதுதான். ஆதலாலேதான் பழிக்கு அடைமொழி தருகிறார் குறளாசிரியர். சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க, என்பதால், அற்பர்கள், புறங்கூறுவோர் முதலாயினோர் பழி பேசினால் அதற்குக் கவலைப்பட வேண்டா, என்பதே கருத்து. எனவே, இவற்றிலிருந்து அறியப்படுவதென்னையெனில், எக் காரணத்தானும் தமிழர் பழி பெறுவதை விரும்பவில்லை. பழியுடன் இன்பம் வருவதாயினும் அதனை விரும்பமாட்டார்கள் எனின்