பக்கம்:தம்பியர் இருவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 37

பழிக்கு எத்துணை அஞ்சி வாழ்ந்தார்கள் தமிழர்கள் என்பது புலனாம்.

தமிழ்க் கம்பன் இக்கருத்தில் ஊறித் திளைப்பவன். அவனுடைய உடலில் ஒடும் குருதி முழுவதும் தமிழ்ப் பண்பாட்டை அறிந்து அதனைப் பறைசாற்றுவதாகலின், சமயம் நேர்ந்த பொழுது தமிழர்களுடைய தலையாய இக் கருத்தைப் பெய்து வைத்து விட விரும்புகிறான். இப்பொழுது தக்கதொரு சந்தர்ப்பம் வந்துளது. அவனு டைய படைப்பாகிய பரதன் அரற்றுகிறான்; தமையனுக்கு தாய் செய்த கொடுமை கண்டு அரற்றுகிறான். அம் மட்டோ: அக்கொடுமையால் நேர்ந்த பழியையும் நினைந்து அரற்றுகிறான். மேலே காட்டிய பாடல்கள் அனைத்திலும் சான்றோர்கள் பழியை வெறுப்பார்கள்,' என்பதுதானே பெறப்பட்டது? -

சான்றோர்களுள் ஒரு சான்றோனாகப் படைக்கப்பட் டுள்ளான் பரதன். எனவே, அவனும் பழிக்கு நானுகிறான்; வந்த பழியை நினைந்து நினைந்து அழுகிறான். அவன் அழுவதாக அமைந்த பதினைந்து பாடல்களில் பத்து இடங்களில் தனக்கு ஏற்பட்ட பழியை நினைந்து வருந்து கிறான். இன்பத்துடன் வரும் பழியைக்கூடப் பெரியோர் கள் விரும்பமாட்டார்கள் எனில், இன்பமும் தாராமல் பெருந் துன்பத்தையே விளைக்கும் பழியை யார்தாம் விரும்புவர்? அதிலும் சான்றோர் அதனைத் திரும்பியும் பார்ப்பரோ? இதோ பரதன் தனக்குற்ற பழியை நினைந்து கவல்கிறான். -

“சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்

வழியுடைத் தாய்வரு மரபை மாய்த்துஒரு பழியுடைத்து ஆக்கினன் பரதன்............

(கம்பன்-2175)

:

'மாபீர் மாயா வன்பழி தந்தீர்’ x (21.77)

"உயிரோடும், தின்றும் தீராவன்பழி கொண்டு’ (2178)