பக்கம்:தம்பியர் இருவர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 4 i

'அன்னவன் தனைக்கொணர்ந்து அலங்கல் மாமுடி

தொன்னெறி முறைமையில் சூட்டல் காண்டிரால்'

- (கம்பன்-2260)

'இராமன் எவ்வாறு நினைப்பான் என்பது தெரியாமல் பரதன் இவ்வாறு சபையோரை நோக்கிக் கூறலாமா? என்று சிலர் நினைக்கலாம். தான் நினைந்தபடி இராமன் வர மறுக்கவும் கூடும் என்பதை அவ்விராமன் தம்பியாகிய பரதனா அறியாமல் இருப்பான்? எனவே, ஒரு வேளை இராமன் வர மறுத்து விட்டால் யாது நடைபெறும் என்பது பற்றியும் அவனே விடை கூறிவிடுகிறான். அவ்வாறு இராமன் வர மறுத்து விட்டாலும், யான் அதுபற்றி கவல வில்லை. அவ்விராமனுடன் தங்கி அரிய காட்டில் நல்ல தவத்தை ஆற்றுவேன். இராமன் என் கொள்கையைக் கட்டுப்படுத்த முயன்றால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்!” என்னும் கருத்தில்,

'அன்றுஎனில் அவனொடும் அரிய கானிடை

கின்றுஇனிது அருந்தவம் நெறியின் ஆற்றுவன்; ஒன்றுஇனி உரைப்பின் என் உயிரை நீக்கு வென்!”

(கம்பன்-2 261)

என்று வஞ்சினம் போலக் கூறுகிறான். இத்தகைய உறுதி படைத்தவனைப் யார் தாம் என்ன செய்ய முடியும்? எனவே, அவையோர் இதோ அவனைப் புகழ்கின்றனர்.

' வான்தொடர் திருவினை மறுத்தி; மன்இளங்

தோன்றல்கள் யாருளர் கின்னின் தோன்றினார்:

" ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்

வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ? ஏழினொடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் வாழிய கின்புகழ்!” என்று வாழ்த்தினார்.”

(கம்பன்-226 2, 6.3)