பக்கம்:தம்பியர் இருவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 2 தம்பியர் இருவர்

தசரதனிடத்தும் இராமனிடத்தும் பெருமதிப்பும் அன்பும் கொண்டிருந்த இவர்கள் பரதனைப் போற்றினார் கள் எனில், அதுவும், பதினான்கு உலகங்களும் அழியினும், “நின் புகழ் எஞ்சுமோ என வாழ்த்தினர் எனில், பரதனு டைய உயர்குணத்திற்கு வேறு சான்றும் தேவையோ?

கம்பன் காட்டும் பரதன்

இதுகாறும் பரதனைப் பிறர் கண்ட முறையையும், நாம் கண்ட முறையையும் கண்டோம். இவற்றிலிருந்து பரதனைப் பற்றிய ஒரு முழுத் தன்மையை அறியமுயல வேண்டும். இராமன், பரதன் என்ற இருவருமே கம்பனு டைய படைப்புக்கள்தாம். ஆனால் இருவரையும் இரு வேறு அச்சுக்களில் வார்க்கிறான் கம்பன் என்னும் கலைஞன். தொடக்கத்திலிருந்தே இராமனைக் கடவு ளாகவே காண்கிறான் கம்பன். வான்மீகியார் இராமனை மனிதருள் சிறந்தவனாக்கிக் களித்தார். ஏனைய புத்த இராமாயணம், சைன இராமாயணம் போன்றவற்றிலும் இராமனை மனிதருள் சிறந்தவனாகவே காணலாம். ஆனால், கம்பநாடன் செய்த பல்வேறு புரட்சிகளுள் இது வும் ஒன்று. இராமனைக் கடவுளாகவே கொண்டுவிட் டான். விராதன், சரபங்கன், வாலி முதலானவர்கள் கூற்றிலும் இக்கருத்தையே காண்கிறோம். இவை அனைத் தும் ஒரு புறம் நிற்க. இராவணனுங் கூட இராமனுடைய கடவுள் இயல்பை ஒரு கணம் அறிகிறான்.

இவனோ தான்.அவ் வேதமுதற்கா ரணன்என்பான்?”

(கம்பன்-9837) இவை அனைத்தும் பாத்திரங்களின் கூற்றுக்களாகை யால், நூலாசிரியன் கருத்தும் இது எனக் கூறல் பொருந் தாது, எனில், ஆசிரியன் தானாகக் கூறும் இடங்களும் உண்டு. ஒன்றைக் காணலாம்.

வாலி தன் மார்பிற்பாய்ந்த அம்பை உருவி அதில் எழுதியுள்ள பெயரைக் காண்கிறான்,' என்ற இடத்துக்