பக்கம்:தம்பியர் இருவர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 4 3

கவிஞன் கூற்றாக வரும் சொற்கள் நூலாசிரியனும் இராமனைக் கடவுளாகவே கொண்டான் என்பதை அறிவுறுத்துகின்றன.

“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத்

தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன்

என்னும் செம்மைசேர் நாமங் தன்னைக் கண்களில் தெரியக்

கண்டான்’ (கம்பன்-40.13)

எனவே, இதிலிருந்து இராமனைப் பொருத்தமட்டில் கம்பநாடன் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தான் என் பதில் ஐயம் இன்று. ஆனால், அவன் பரதனை எவ்வாறு கருதிப் படைத்தான்? ஒரு பாத்திரத்தைக் கடவுளாவே படைத்து, அப்பாத்திரத்திடம் உயர்ந்த பண்புகளை ஏற்று தவில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், மனிதனாகவே ஒரு பாத்திரத்தைப் படைத்து அதனிடம் உயர்பண்புகளை ஏற்றிக் காட்டுவதிலேதான் முழுச் சிறப்பும் இருக்கிறது. இராமன் நீங்கலாக உள்ள பாத்திரங்கள் அனைவரும் மனிதப் பண்புடன் விளங்குகிறார்கள். எனவே, மனிதர்கட் குரிய குறைவு நிறைவுகளையும் அவர்களிடம் காணலாம். சிலரிடம் குறைவு மிகுதியாகவும், சிலரிடம் நிறைவு மிகுதி யாகவும் காணப்படலாம்.

பாத்திரங்களின் பண்பாடுகளை ஆயும்பொழுது மற வாமல் மனத்துள் இருத்தற்குரிய சட்டம் ஒன்று உண்டு. முழுவதும் நிறைவேயுடையாரும் முழுவதும் குறைவேயுடை யாரும் யாண்டும் இவ்வுலகில் இல்லை. எனவே, குண ஆராய்ச்சி செய்யும் பொழுதும் இதனை மனத்துட்கொண்டு ஒரு பாத்திரத்தின் குறைவு நிறைவுகளைக் காண்டல் வேண்டும். வள்ளுவப் பெருந்தகை கூறிய,