பக்கம்:தம்பியர் இருவர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 14. 9.

கோள் என்ற ஒன்று இருந்துவிடுமாயின், அதுவே போது மானது. அந்தக் குறிக்கோளுக்கு எத்தனை இடையூறுகள், சோதனைகள் வந்தாலும் கொண்டு செலுத்தக்கூடிய உறுதி-தளராத மனஉறுதி-ஒன்று மட்டும் இருப்பின், அதுவே போதுமானது.

பரதன் என்ற மனிதன் உயர்குடியில் அரசன் திரு மகனாய்ப் பிறந்தது உண்மைதான். ஆனால், அரசச் செல்வம் காரணமாக அவன் பண்பாட்டை அடைய வில்லை. இன்னம் கூறப்போனால், அந்த அரசச் செல்வம் அவன் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும் இடை யூறாகவே அமைந்து விட்டது. ஒருவனுடைய ஆன்ம முன்னேற்றத்திற்கு வறுமை இரும்பு விலங்காகும்; அதே போல எல்லையற்ற செல்வமும் பொன் விலங்காகும். இரும்பு விலங்கிலிருந்து தப்பித்துக் கொள்பவருங்கூடப் பொன்விலங்கிலிருந்து விடுதலையடைதல் கடினம். இது கருதியே போலும் மணிவாசகப் பெருந்தகை செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்' (திருவாசகம் போற்றித் திரு அகவல். 39) என்று கூறிப்போனார்! பரதன் இந்தப் பொன் விலங்கிவிருந்தும் எளிதாக விடுதலை அடைந்து விட்டான். அவ்வளவு எளிதாக அவன் விடுதலை அடைய உதவியது யாது? அவன் மேற்கொண்ட குறிக்கோளே அன்றோ? இராமனை அண்ணனாகவும், தந்தையாகவும். தாயாகவும், வழிபடு தெய்வமாகவும் அவன் கருதிப் போற்றினான். இவ்வெண்ணத்தில் உறைப்பு ஏற ஏற அவனுடைய வாழ்வு உயரத் தொடங்கியது. இராமன் எத்தகையவன், அவன் செய்கின்ற செயல்கள் யாவை? என்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு அவன் காலத்தை வீணாக்கவில்லை. அவனுக்குத் தேவையான பொருள் இராமன் என்ற இலட்சிய புருடன் தான். அந்தக் குறிக் கோள் மனத்தை முன்னேற்றிக் கொண்டே செல்கிறது.

தான் கொண்ட குறிக்கோளில் எவ்வளவுக்கு எவ்வளவு பரதன் உறைத்து நிற்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு