பக்கம்:தம்பியர் இருவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 ● தம்பியர் இருவர்

மனிதத் தன்மை நீங்கித் தெய்வத் தன்மை அடைகிறான். பரதனுடைய வாழ்வில் எத்துணை முறைகள் குறிக்கோளுக் காகத் தன்னையும், தன் எண்ணங்களையும்-ஏன்?-முடிபு களையுங்கூடத் தியாகம் செய்கிறான்? இராமன் அரசை ஏற்றுக் கொள்ளாவிடினும் தானும் காட்டில் தங்கித் தவம் மேற்கொள்ளப் போவதாகவே பரதன் பன்முறை கூறி னான். தாயிடம் பேசும் பொழுதும், அமைச்சர்களுடன் பேசும் பொழுதும், பரத்துவாச முனிவனிடம் பேசும் பொழுதும் தான் வனத்தில் தங்கிவிடப் போவதாகவும் தவம் மேற்கொள்ளப்போவதாகவுமே கூறுகிறான் பரதன். இத்துணை இடங்களில் தன் கருத்தை வெளியிட்டுக் கூறிய பரதன், காட்டில் தங்கிவிடாமல் நாடு திரும்பியது ஏன்? நாட்டிற்கு வந்தாலும் அரசாட்சியை ஏற்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். காட்டிலேதான் வாழப் போகிறேன், என்று இத்துணைப் பேர்களிடம் தன் உறுதி யைத் தெரிவித்த பரதன், இப்பொழுது நாடு மீளக் காரணம் யாது? தான் சொன்ன சொற்களைக் காவாமல் விடுவது முறையா? முறைதான். எப்பொழுது? தான் சொன்ன சொல் வேறாகவும், தன்னுடைய குறிக்கோள்' இடும் கட்டளை வேறாகவும் இருந்துவிட்டால் என் செய்வது? நம்மைப் போன்ற சாதாரண மக்கள் நாம் கூறிய கூற்றே பெரிதென்று மதித்து அதனைக் காப்பாற் றியே தீருவோம் என்று முனையும்பொழுது நம் சொல்லின் மேல் கொண்ட அன்பால் அதனைச் செய்யவில்லை! பின்னர் என்? நான் என்ற ஆணவத்தின்மேல் கொண்ட காதலால் அந்த நானைக் கீழே விட்டு விடக்கூடாது என்ற காரணத்தால்தான் சொன்ன சொல்லைக் காத்தல் வேண்டும் என்று முனைகிறோம். எனவே, இச்செயலும் ஆழ்ந்து நோக்கினால் நம்முடைய ஆணவத்திற்கு இரை தரும் செயலாகவே முடியக் காணலாம்.

இத்தகைய சூழ்நிலையில் பரதன் தான் தன்னைப் பற்றிக் கூறிய சொற்களைக் காக்க முற்படவில்லை. ஏன்?