பக்கம்:தம்பியர் இருவர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 5 I

தான் கூறிய சொற்களைக் காட்டிலும் தன் குறிக்கோளா கிய இராமன் கூறிய சொற்களைக் கடைப்பிடித்தல் மிகவும் இன்றியமையாதது. குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதனிடம் நான்’ என்ற பொருளைச் சரண் செய்துவிட்ட பிறகு நானு'க்குத் தனியான சொல்லும் செயலும் ஏது? பரதன் என்ற மனிதன், இராமபக்தி என்ற குறிக்கோளில் ஒன்றிவிட்டான். இராமன் எதிரே இல்லாத வரை பரத னுக்கு என்று தனியான சொல்லும் செயலும் உண்டு. ஆனால், இராமன் பேசத் தொடங்கிவிட்டால், அவன் எதிரே பரதனும் இருந்துவிட்டால், பிறகு பரதனுக்கு என்று ஒன்றும் இல்லை. இராமன் இல்லாத நேரத்தில் பரதன் என்ற மனிதன் பேசினான். தன் கருத்தாக, முடிபாக ஒன்றை வெளியிட்டான். காட்டில் வாழும் மன்னனைக் கொணர்ந்து நாட்டில் முடி கவித்துவிட வேண்டும்; இன்றேல், தானும் காட்டில் தவக்கோலம் பூண வேண்டும் என்று முடிபு செய்தான்; அதை வெளியிட்டும் கூறினான். அவன் எந்த முடிபைக் கூறினாலும் அது இராமனுடைய ஆணைக்கு உட்பட்டதே ஆகும். இக்காலத்தில் வரவு செலவுக் கணக்கை கூறுபவர் தணிக்கையாளர் சோத னைக்கு உள்ளிட்டே இது வெளியிடப்படுகிறது' என எழுதுகிறார்களல்லவா? எனவே, தணிக்கையாளர் இக் கணக்கை ஒப்பவில்லையாயின், வெளியிட்ட கணக்கை மறுத்துவிடவும் உரிமை உண்டு என்பதை அனைவரும் அறிவர். அதேபோலப் பரதன் என்ற மனிதன் இராமன் இல்லாத பொழுது பேசும் பேச்சுக்கும் கூறும் முடிபுகளும் இராமனுடைய தணிக்கைக்கு உட்பட்டனவேயாகும். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பரதனுடைய சொல்லும் செயலும் இராமனால் ஒப்பப்படுகின்றன. ஆனால் சிற்சில நேரங்களில் அவை மாறுபடுமாயின், இறுதியாக எஞ்சுவது இராமனுடைய கட்டளையே தவிரப் பரதனுடைய முடிபன்று. -

1. Subject to audit