பக்கம்:தம்பியர் இருவர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5認 தம்பியர் இருவர்

இதனைக் கண்டு யாரும் வியப்படைய வேண்டா. இந்நாட்டுப் பெரியார்கள் கண்ட சரணாகதித் தத்துவ கூட்பொருள் இதுதான். ஏதாவது ஒரு குறிக்கோளைப் பற்றிக்கொண்ட இவர்கள் அதில் தம்மை, தாம் என்ற ஆணவத்தை, அமிழ்த்திவிடுகின்றனர். அதன்பிறகு இவர்களுக்குத் தனி வாழ்வு என்று ஒன்றும் இல்லை. தம் குறிக்கோள் பொருட்டாகவே வாழ்வார்களே தவிரத் தம் முடைய நலந் தீங்கு பற்றிக் கவலையுறுவதில்லை. இக் கருத்தை மணிவாசகப் பெருமான் இதோ பாடுகிறார்.

'அன்றே என்றன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட்

கொண்ட போதே கொண்டிலையோ? இன்றுஓர் இடையூறு எனக்குஉண்டோ

எண்தோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

நானோ இதற்ரு நாயகமே? *

(திருவாசகம். குழைந்த பத்து. 7)

தமக்கு எனத் தனிவாழ்வு வேண்டாதவர்களாகலின் இவர் களுடைய உடைமைகள் அனைத்தும் இவர்களால் குறிக்கோளாகப் போற்றப்படும் பொருளுக்கேயாம். இக் கருத்தை இதோ பெரியாழ்வார் பாடுகிறார்.

"தோட்டம், இல்லவள், ஆத்தொழு, ஒடை, துடவை யும்கின றும் இவை யெல்லாம் வாட்டம் இன்றிஉன் பொன்அடிக் கீழே . வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன்.’’

(நாலாயிரப் பிரபந்தம், 437).

ஒவ்வொன்றாக அடுக்கித் கூறுவதால் யாது பயன்? சுருங்கக் கூறினால், இவர்கள் தம்மைக்காட்டிலும் தாம் கொண்ட குறிக்கோளிடத்துப் பற்றுக் கொண்டவர் கள் எனலாம். உலகத்தில் வாழும் மக்களுள் ஒவ்வொரு