பக்கம்:தம்பியர் இருவர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 互 53

வருக்கும் சிறந்தது எது என்று கேட்கப்பட்டால் அவரவர் களே அவரவர்கட்குச் சிறந்தவர் என்ற விடைதான் வரும். இதோ நாவரசர் பாடுகிறார்.

"என்னில் யாரும் எனக்கு இனி யார் இலை;

என்னி லும்இனி யான் ஒரு வன்உளன்: என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போக்துபுக்கு என்னு ளேகிற்கும் இன்னம்பர் ஈசனே.”

(தேவாரம் 5: 21:1)

தம்மைக்காட்டிலும் தமக்கு இனியவன் இறைவன் என்று பாடுகிறார் நாவரசர். அதே போலப் பரதனுக்குப் பரதனைக் காட்டிலும் இனியனாவான் இராமன். அந்த இராமனுடைய கட்டளை வேறுவிதமாக இருந்திடின் பரதன் அக்கட்டளையை நிறைவேற்றுவானே தவிரத் தான் கொண்ட முடிபை நிறைவேற்ற ஒருப்படமாட் டான். மனிதனாய் இருந்த பரதன் தேவனாக மாற இவ் வழியைத்தான் மேற்கொண்டான். தான் கொண்ட குறிக் கோளை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப் பவன் தன்னைக்காட்டிலும் குறிக்கோளினிடத்து மதிப்பு

வைத்திருப்பவன் என்பது தெரியவில்லையா? அவ் 'வாறன்றித் தான் கூறிய சொற்களை மட்டும் எவ்வாறா யினும் காக்கவேண்டும் என்று நினைப்பவன், தன்

மேலேயே முழு மதிப்பையும் வைத்திருக்கிறான் என்று கூறத் தேவை இன்று. நம்மைப் போன்ற சாதாரண மனிதர் கள், தாம் சொல்லிய சொல்லைக்கூடக் காக்க முடியாமல் காற்றில் விட்டுவிடுவார்கள். இத்தகைய மனிதர்கள் கூட்டத்தில் தன் சொல்லை மறவாது காப்பவன் பெரிய மனிதன்தான். நம்மை நோக்க அவன் பெரிய மனிதனாகக் காட்சியளிக்கிறான். அவ்வளவுதான். நம்மிடத்திலேயே நமக்கு மதிப்பு இல்லை. ஆனால், தன் சொல்லைக் காப் பவன் தன்னிடத்தே மதிப்புக் கொண்டவனாகலின், நம்மைவிட உயர்ந்தவனாதல் சரி. ஆனால், தன்னிடம் கொண்ட மதிப்பைக்காட்டிலும் தன் கொள்கை அல்லது