பக்கம்:தம்பியர் இருவர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 தம்பியர் இருவர்

குறிக்கோள்மேல் மதிப்பு வைத்திருப்பவன் மிகமிகப் பெரியவனே. முன் கூறப்பெற்ற இரு கூட்டத்தாராலும் மதிக்கப்பட வேண்டியவனாகிறான் கொள்கைமேல் மதிப்பு வைத்திருப்பவன். இத்தகைய உண்மை நன்கு உணரப்பட் டால் அன்றிப் பரதனை நன்கு அறிய முடியாது. தானே கூறிச் சென்ற சொற்களைக்கூடத் தவற விட்டுவிட் டானோ என்ற ஐயத்திற்கும் இடம் உண்டாகும். தான் கூறிய சொல்லைப் பெரியதென்று மதித்துப் பரதன் அதனை நிலைநிறுத்தி இருப்பின், பரதனை மனிதருள் சிறந்தவனாக மட்டுமே கருத இடமுண்டு. ஆனால், தன் சொல்லைப் பெரிதென மதியாமல் இராமன் கட்டளை யைச் சிரமேற்கொண்டு நந்திக் கிராமத்தில் வந்து தங்கி விட்டமையின், பரதன் மனிதத் தன்மையைக் கடந்து கடவுள் தன்மையை அடைந்துவிட்டான். ஆம்! மனித ராய்ப் பிறந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன தியாகத்தைச் செய்தால் உயர்வை அடைய முடியும்? என்பதைச் செயலில் செய்து காட்டிவிட்டான் ஆயிரம் இராமர்கட்கும் மேம்பட்டவனான அப்பரத வள்ளல்.

நேர்மையின் ஆணி’ என்று இராமனே பரதனைக் கூறினான் என்பதை அறிவோம். தன் சொல்லைக் காவாமல் விடுவது நேர்மையா? அறமா?’ என்ற வினாத் தோன்ற இடமுண்டு. பல சமயங்களில் அறம், நேர்மை என்பன நம்மை மருட்டிவிடுகின்றன. எது அறம்? எது நேர்மை? இதோ பரதனுடைய சொல்லையும் செயலை யுமே எடுத்துக்கொள்வோம். பரதன் அறம் பிறழ்ந்து விட்டானா தன்.ெ சால்லைக் காவாமையால்? அறத்தின் பொருளை உணராதவர் அவன் தவறிவிட்டான் என்று கூடக் கூற முன் வருவர்! சாதாரண உலகியல் நிலையில் நிற்கும் நாம் அறம் என்று கூறுவதை அனைவரும் ஏற்பர் என்று கூறல் இயலாது. உலகியல் அறம், காலத்துக்கு ஏற்ப வம், இடத்திற்கு ஏற்பவும் மாறுபடும் இயல்புடையது. நூறு ஆண்டுகட்குமுன் அன்ன சத்திரங்கள் கட்டி வைத்தல்