பக்கம்:தம்பியர் இருவர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 5 5

அறம் என்று கருதப்பட்டது. அன்று நாடு இருந்த நிலையில் அது முறை தான். ஆனால், இன்றும் அதனை அறம் என்று கூறினால் அறிஞர்கள் நம்புவார்களா? காலம் மாறினதால் அறமும் மாறிவிட்டது. இம்மாறுபாட்டைத் தான் நம் காலத்தே வாழ்ந்த கவிஞர் உணர்த்துகிறார்,

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

அன்ன புண்ணியம் யாவினுங் கோடி

ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்துஅறி வித்தல்.” - -பாரதியார் என்ற பாடல் மூலம். கால மாற்றத்தால் அறம் மாறினது போல, இடம் மாறும் பொழுதும் அறம் மாறுபடும். குளிர் தவிர வேறு அறியாத எஸ்கிமோக்கள் வாழும் இடத்தில் புலால் உணவு அறத்திற்கு மாறுபட்டது என்று கூற முடியுமா? சீல்மீன்கள் தவிர வேறு எதனை உண்டாலும் அவன் வாழ முடியாது. எனவே, இடத்திற்கு ஏற்பவும் அறம் மாறுபடுவதைக் காண்கிறோம். இவை போன்றவை உலகியல் அறங்கள் எனப்பெறும். இத்தகைய அறங்கள் காலம், இடம் என்பவற்றிற்குக் கட்டுப்பட்டு மாறுபடும் இயல்புடையவை. உலகியலில் வாழ்பவர்கள் தாம் வாழும் இடம் காலம் என்பவற்றிற்கு ஏற்ப இந்த அறங் களைக் கடைப்பிடித்து வாழவேண்டுவது மிக மிக இன்றி யமையாதது. ஆனால் பரதன் போன்றவர்கள் இந்த அறங் கட்குக் கட்டுப்படுவதில்லை. அவர்கள் இவற்றினும் வேறு பட்ட உயர்ந்ததும், மாறாததும், என்றும் இருப்பதும் ஆன அறத்தைப் பின்பற்றி நடப்பவர். அத்தகைய அறங்களுள் ஒன்றுதான் குறிக்கோளுடன் வாழ்வது. தமிழ் நாட் டானுக்கும், எஸ்கிமோவுக்கும், ஐயாயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தவனுக்கும், கி. பி. நாலாயிரம் ஆண்டில் வாழ்பவனுக்கும் இவ்வறம் பொதுவானதே; என்றும்

1. Higher Moral law