பக்கம்:தம்பியர் இருவர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫齿6 தம்பியர் இருவர்

உள்ளது; எங்கும் பொதுவானது. இத்தகைய அறத்தை வாழ்வில் மேற்கொண்டவர்களை நாம் நம்முடைய சில்லறை அளவு கோலால் அளந்து காண்டல் அரிது: அளக்க முற்படுவதும் தவறு. பரதனை, அறத்தின் கடல் என்று விசுவாமித்திர முனிவனும், நேர்மையின் ஆணி’ என்று இராமனும் குறிப்பிடுகையில் இந்த உயர்ந்த அறத்தையும் நேர்மையையும் மனத்தில் கொண்டு பேசுகிறார்கள் என்பதை அறிதல் வேண்டும். முனிவன் பரதனைப் பற்றிக் கூறும் உருவகமே இத்தகைய முறையில் பொருள் கூற இடந்தருகிறது. இதோ அவன் கூற்று. - 'தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்

பள்ளம்எனும் தகையானை' (கம்பன்-6:57)

'விலக்குதற்கு அரிதாகிய சிறந்த அறங்கள் (நியாயம்) என்னும் பெரிய ஆறுகள் தன்னிடம் சேர்தலால் பெருகி நிற்கும் கடல் போன்றவன்' என்கிறான் முனிவன், ஆம்! ஆற்றுக்கு நீர் ஏது? கடலிலிருந்துதான் கிடைக்கிறது மழை மூலமாக, ஆனால், ஆற்று நீரின் சுவையும் இயல்பும் கடல் நீரின் சுவையினும் இயல்பினும் மாறுபட்டவை அல்லவா? அதே போலச் சில வாழ்நாள் சிற்றறிவுடையவர்கட்கு உரிய அறம் வேறு; யாவரினும் மேம்பட்ட பெரியோர்கட்கு அறம் வேறு. இரண்டிற்கும் அறம் என்றுதான் பெயர் கூறப் படும். என்றாலும், நிலைபேறுடைய கடல் போன்ற அறங் களைக் கடைப்பிடிப்பவர்களும் உண்டு. பரதனும் இத்த கையவனே என்பதை உய்த்து உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கம்பநாடன் படைத்த பரதனிடம் மற்றொரு சிறப்பும் காணக் கிடக்கின்றது. பரதன் என்ற மனிதன் மகாத்துமா பரதன் ஆகிறான். அவன் வாழ்வு முழுவதிலும் ஒரு ‘தெய்வீக நிகழச்சி'யாவது குறிக்கப்படவில்லை. காவியத் தில் படைக்கப்படும் பெருந்தலைவர்கட்கு இத்தகைய

1. Miracle