பக்கம்:தம்பியர் இருவர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 五57

நிகழ்ச்சிகளையும் உடன் அமைப்பது திறனாய்வாளரும் ஒப்புகின்ற முறைதான். உலகின் பல்வேறு மொழிகளிலும் தோன்றியுள்ள காப்பியங்கள் அனைத்திலும் இயற்கையின் இறந்த நிகழ்ச்சி” கலந்தே கூ ற ப் ப டு கி ன் றது. ஆ ன ல், கம்பநாடன் பரதனைப் பெரியவனாக மகாத்துமாவாகக் காட்ட இவற்றின் உதவியைச் சற்றும் நாடவில்லை. மற்றவர்கள் ஒருவனைப் பெரியவனாக ஏற்றுக் கொள்வதற்கு அவனிடம் காணப்பெறும் இந் நிகழ்ச்சிகள் காரணமாகலாம். ஆனால், இவை இன்றி யும் ஒருவனைப் பெரியவன் என்று அனைவரும் போற்று கின்றனர். எனில், அதில் ஒரு வியப்பு அடங்கியுளது. எவ்வித மான உதவியும் இன்றிப் பரதன் நம்முடைய மனத்தைக் கவர்ந்துவிடுகிறான். தெய்வம் என்று கருதப்படும் இராம னில் தொடங்கி, விலங்கு என்று கூறப்படும் அனுமன் ஈறாக அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுகிறான் பரதன். என்றாலும், இயற்கையின் இறந்த நிகழ்ச்சி ஒன்றையும் அவன் செய்ததாகவோ, செய்ய முயன்ற தாகவோ, கவிஞன் காட்டவில்லை; குறிப்பாகவேனும் காட்ட முயலவுமில்லை. தன்னிடம் இயற்கையாய் அமைந்த பண்பாட்டாலும் தான் கொண்ட குறிக்கோளி னிடத்துத் தன்னையே தியாகம் செய்துவிட்ட பண்பாட் டாலும் பரதன் உயர்கிறான். அவனைத் தொடர்ந்து செல்லுதலும் அரிது என்று பிறர் கூறத்தக்க நிலையை அடைகிறான். பால காண்டத்தில் கைகேயி மைந்தனாய்த் தோன்றிய பரதன், பண்பாட்டால் உயர்கிறான். தசரத னின் காதல் மனைவியின் மைந்தன் என்பதாலும், இராம னுக்குப் பின் தோன்றியவன் என்பதாலும் பரதனுக்குப் பாலகாண்டத்தில் பெருமை கிடைக்கிறது. மேலே செல்லச் செல்ல, பரதனைப் பெற்றவள் என்பதால் கைகேயியின் குற்றத்தைக்கூட அனைவரும் மறக்கத் துணிந்துவிட்டார் கள். ஆம்!

1. Supernatural action