பக்கம்:தம்பியர் இருவர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 58 தம்பியர் இருவர்

'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன்தந்தை

என்நோற்றான் கொல்!” என்னும் சொல்.’’ (திரு.-70) என்ற குறள் தந்தைக்கு மட்டுமா பேசுகிறது? பாடலில் ஆண்பால் பேசப்படினும் தாய்க்கும் அக்குறள் பொதுத் தானே? தசரதனை மணந்த கைகேயியை யாரே மதிப் பர்? பரதனைப் பெற்ற கைகேயியை யாரே இழிப்பர்? ஆம்! பரதனைப் பெற்றதால் அப்பெருமாட்டி செய்த பிழைகளை அனைவரும் மறந்து விட்டனர். இராமபிரான் கைகேயியைத் தாய் எனவே மதித்தான் முதலில். பெற்ற தாய்க்கும் வளர்த்த கைகேயிக்கும், வேறுபாடு பாராட்ட வில்லை அப்பெரு மகன்; தன்னை வளர்த்த அவளை அது வரை தாய் எனவே மதித்தான். ஆனால், பின்னர்ப் பரதனுடைய முழுத்தன்மையையும் கண்டறிந்த பிறகு அத் தகையவனைப் பெற்றெடுத்தவள் சாதாரணப் பெண் அல்லள் என்பதை உணர்ந்துவிட்டான். பரதனை முழு வதும் அறிந்த பிறகு கைகேயியைப் பற்றி இராமன் ஒரே இடத்தில்தான் பேசுகிறான். ஆனால், அந்த இடத்தில் "தாய்’ என்று அவளைக் குறிக்கவில்லை; தெய்வம், என்றே குறிப்பிடுகிறான். இராவணனை வென்று வாகை சூடி வரும் மைந்தனை ஆர்வத்துடன் காண வருகிறான் தசரதன் தேவர் உலகினின்று: மைந்தனை ஆரத் தழுவி, ‘ஏதேனும் வரம் பெறுக’ என இரந்து வேண்டுகிறான். இராமன் ஒரு வரம் வேண்டுகிறான். ஆம்! பரதனுடைய குறிக்கோளுக்கு இலக்கானவனன்றோ இராமன்! அவன்

வேறு என்ன கேட்பான்? இதோ காணுங்கள். -

'. ஆயி னும்உனக்கு அமைந்தது.ஒன்று உரை என அழகன்,

'தீயள் என்றுt துறந்தளன் தெய்வமும் மகனும்

தாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத் தாழ்ந்தான்.’’ * - - (கம்பன்-10979) இதுவரையில் இராமன் கைகேயியை யாண்டும் தெய்வம் என்று கூறவில்லை. ஆனால், இப்பொழுது அவ்வாறு கூறக் காரணம் யாது? ஒன்றே ஒன்றாய்த்தான் இருத்தல் கூடும். பரதனைப் பெற்றவள் தெய்வமாகத்தான் இருத்தல் கூடும்