பக்கம்:தம்பியர் இருவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 9.

தம்பிநின் றானை நோக்கித்

தலைமகன் தன்மை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணிர்

அருவியிசோர் குன்றின் கின்றான்.”

(கம்பன்-1975)

இப்பாடலில் தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி, என வரும் அடியால் இவ்வாறு பொருள் கொண்டனர் போலும்! அரசர் செல்வத்தில் பிறந்து வளர்ந்த இவர்கள் இப்பொழுது படுகிற பாட்டைப் பார்த்த குகன், மாறி மாறி இருவரையும் பார்த்தான் , என்று கூறுவதே போதுமானது. அரண்மனையில் இனிய இன்பத்தில் கவலையின்றி உறங்கவேண்டிய இளையவன், கவலையே உருவெடுத்தது போல இப்பொழுது விடியு மட்டும் உறங்காமல் இருக்கிறானே! என்ற எண்ணத்தால் குகன் இலக்குவனைப் பார்த்திருக்கலாம். முடி சூடும் தலைக்குள்ளே தான் கவலைகள் அனைத்தும் குடி புகும்,' என்று கூறுவர். ஆனால், இளையவன் கவலையற்று உறங்க வேண்டிய நேரத்தில் இவ்வாறு காவல் புரிய நேர்ந்ததே ! அதுவும், இற்றதோர் நெஞ்சினனாக இருகணிர் அருவி சோர, உற்ற ஒவியமாக ஒரு சிலை அதனின் நிற்கும்' நிலையைக் கண்ட குகன், எல்லை அற்ற துயர்க்கடலில் மூழ்கிவிட்டான்.

தன்பால் தோன்றும் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு வாழும் நாகரிகத்தில் பழகியவன் அல்லன் குகன். இளம்பிள்ளையாகிய இலக்குவன்-மன மகிழ்ச்சியோடு உறங்க வேண்டியவன்-இவ்வாறு நிற்றலும் காவல் செய்த லும் அவனுக்கு வருத்தத்தை உண்டாக்கியதோடு அவனுடைய தாய்மை உணர்ச்சி'யையும் தூண்டிவிட்டன. எனவே, அவனை நோக்கினான். உடனே இலக்குவன்

1. Uneasy lies the head that wears a crown. Shakes. Henry IV, Part 2. Act III, Sc I. -